Author Topic: படித்ததில் பிடித்த கவிதை  (Read 278 times)

Offline RajKumar

யாசகம் அல்ல
"காதல்",
பார்த்ததும்
வருவதல்ல காதல்...

ரோஜாவைப் பார்த்ததும்
இதழில் புன்னகை
பூப்பதும் ஒரு காதல்...

ஒரு
ஜோடிப் புறாவின்
அன்பை ரசிப்போமே
அதுவும் ஒரு  காதல்...

கண்ணால் காணாமல்
ஒருவர் மீது
ஒருவர் பாசம்
வைப்பதும் ஒரு காதல்...

ஏழைங்கு
மனம்  இரங்குவோமே
அதுவும் ஒரு காதல்...

தாய்
தன் குழந்தையிடம்
காட்டும் அன்பும் ஒரு காதல்...

காதல் என்பது
ஆண், பெண்
இணைவது மட்டும் அல்ல...

அதையும் தாண்டி
எல்லாம் ஓர் நேசம்
என்ற ஒன்றை
புள்ளிக்குள்
இந்த உலகமே
அடங்கி விடும்...

உலகில்
அன்பால் ஆளப்படும்
எச்செயலும் காதலே..