Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
சுவாசிக்காமல் வாழ முடியுமா?
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: சுவாசிக்காமல் வாழ முடியுமா? (Read 7 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225541
Total likes: 28430
Total likes: 28430
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
சுவாசிக்காமல் வாழ முடியுமா?
«
on:
Today
at 08:33:48 AM »
ஒரு சமயம் சுவாமிநாத பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள் அமெரிக்கா சென்றிருந்தார். அங்குள்ள சில விஞ்ஞானிகளிடையே உரையாற்றும் வாய்ப்பு ஏற்பட்டது அவருக்கு. அப்போது ‘பிராணா’ என்ற உயிர்சக்தியை, தகுந்த பயிற்சிகளின் வாயிலாக வளர்த்துக் கொண்டால், ஒருவர் ஒரு மணி நேரம்கூட சுவாசிக்காமல் உயிர்வாழ முடியும் என்றார் அவர். அந்தக் கூற்றை நம்பாத அமெரிக்க விஞ்ஞானிகள், அதை பரிசோதித்துப் பார்ப்போமா என சவால் விட, சுவாமிகள் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலுள்ள ‘மெரிங்கர் பவுண்டேஷன்’ ஆராய்ச்சிக்கூடத்தில், மூன்று பெரிய கண்ணாடி சேம்பர்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றுக்குள்ளிருந்த காற்று முழுவதும் பம்புகளால் உறிஞ்சி வெளியேற்றப்பட்டன. சுவாமிகளின் உடலில் பல எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்டு அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், மூளையின் செயல்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், சுவாமிகளின் காது, மூக்கு மற்றும் உடலிலுள்ள வியர்வைத் துவாரங்களில், மெழுகு பூசியும், காற்று உள்ளே புகாமல் அடைக்கப்பட்டன.
பரிசோதனை நடைபெறும் சமயத்தில், கண்ணாடி சேம்பரில் அமர்ந்த சுவாமிகள், தபேலா வாசிக்கப்போவதாகவும், மொட்டையடிக்கப்பட்ட தனது தலையின் உச்சியில், ஒரு நாணயத்தை வைக்கும்படியும், தனது உடலில் ஒரு மைக்கைப் பொருத்தி, அதன் வாயிலாக உண்டாகும் சத்தத்தைக் கேட்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். விஞ்ஞானிகளும் அப்படியே செய்தனர்.
மூன்று கண்ணாடி சேம்பரிலும், உள்ளே இருந்த காற்றை உரிய பம்புகள் மூலம் உறிஞ்சி வெற்றிடமாக்கினர். முதல் சேம்பரில் சுவாமிகள் அமர்ந்திருந்தார். இரண்டாவது சேம்பரில் எரியும் மெழுகுவர்த்தியை வைத்தனர். மூன்றாவது சேம்பரில் ஒரு குரங்கை உட்கார வைத்திருந்தனர். இந்தப் பரிசோதனையில் ஐந்து நிமிடங்கள் கடந்தன.
வெற்றிடம் உருவாக்கப்பட்ட மூன்று சேம்பரில், இரண்டாவது சேம்பரிலிருந்த மெழுகுவர்த்தி தொடர்ந்து எரியத் தேவையான பிராண வாயு இல்லாததால் அது அணைந்துபோனது.
மூன்றாவது சேம்பரிலிருந்து குரங்கின் செயல்பாடுகள், மெல்ல குறைந்து மயங்கி விழுந்துவிட்டது.
முதல் சேம்பரிலிருந்த பிரம்மானந்த சுவாமிகள், மிக அமைதியாக தபேலா வசித்துக் கொண்டிருந்தார். அவரின் இதயத்துடிப்பு - முளையின் இயக்கம் அனைத்தும் இயல்பாக இருந்தது. ஆனால், வியர்வை மட்டும் உடல் முழுவதிலும் ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவரது உச்சந்தலையில் வைக்கப்பட்டிருந்த நாணயம் மட்டும், மேலும் கீழுமாகக் குதித்துக்கொண்டிருந்தது. சுவாமியின் உடலில் உள்ள மைக்கிலிருந்து நீர் வீழ்ச்சியில் நீர் சொட்டுவதுபோன்ற ஓசை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. காற்றில்லா வெற்றிடத்தில், சுமார் நாற்பதைந்து நிமிடங்கள் வரை சுவாமிகள் தபேலா வாசித்துக்கொண்டிருந்தார். பின்னர், அவரது இதயத்துடிப்பில் சிறிது மாற்றம் காணவே, விஞ்ஞானிகள் அதற்குமேல் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர விரும்பவில்லை. சுவாமிகள் ஒரு மணி நேரம் வரை தொடரலாம் என்றபோதும், விஞ்ஞானிகள் 45 நிமிடத்திலேயே தமது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டனர்.
பின்னர், இதுகுறித்து சுவாமிகளிடம் கேட்ட போது, ‘பிரபஞ்ச சக்தி, சகஸ்ரார சக்கரத்தின் வழியே, உடலில் நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்ததால், தலை மீதிருந்த நாணயம் மேலும் கீழுமாக துள்ளியது. உடலில் மைக்கை வைத்தபோது, கேட்ட நீர்வீழ்ச்சி போன்ற இரைச்சல், உடலிலினுள் ‘பிராணா’ எனும் உயிர்ச்சக்தி ஓடுவதால் ஏற்படும் ஒலியே. இந்தப் பிராணா சக்தியை அதிகரித்து, நோயற்ற வாழ்வு வாழலாம் - ஆயுளையும் நீட்டிக்கலாம்’ என்றார் சுவாமிகள். அதைக் கேட்ட விஞ்ஞானிகள், ‘இந்தச் சாதனை அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விந்தை’ எனக் கூறி வியந்தனர்.
(முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள்-2005 (Author: John P Nayagam) என்ற நூலிலிருந்து).
🖊
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
சுவாசிக்காமல் வாழ முடியுமா?