நான் பார்த்தது பேய் அல்ல தேவதை!
எங்கள் கிராமம் மிக அழகிய சிறிய கிராமம்!
அன்று பெளர்ணமி இரவு
அங்கு மொத்தமாய் பத்து குடும்பங்கள் மட்டுமே
விளையாட நாங்கள் செல்கையில் " 6 மணிக்கெல்லாம் வீடு திரும்பிடு" என்று
சொல்லி அனுப்பும் அம்மா !
"எங்க வேணாலும் பொய் விளையாடு
அந்த பழைய வீடு கிட்ட மட்டும் போகக்கூடாது"னு என்று
தினமும் அம்மா சொல்வதுண்டு!
ஒரு நாள் கண்ணாம் பூச்சி ஆட்டத்தில்
என் தோழர் ,தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தோம்!
விளையாட்டு ரொம்ப சுவாரசியமாக கடக்க
நேரம் போனது கூட தெரிய வில்லை
என் தோழர் தோழிகளை கண்டு பிடிக்க செல்கையில் !
எந்த பக்கம் பார்த்தாலும் அவர்களில் ஒருவர் கூட
என் கண்ணிற்கு தெரியவில்லை
எங்கோ சென்று ஒளிந்து கொண்டனர் போலும் என எண்ணினேன்
பவுர்ணமி நிலவு பகல் போல ஜொலிக்க
எங்கே ஒளிந்திருப்பார்கள் என ஒவ்வொரு வீடாக
சென்று நானும் தேட
அந்த பழைய வீட்டின் அருகே
என் தோழர் தோழியரின் குரல் ஒலிப்பது போன்று உணர்ந்தேன் !
" நண்பர்களே எங்க இருக்கீங்க "என்று கூப்பிட
அந்த வீட்டை பார்த்தால் சற்று பயம் என்னுள் உணர ,
என் நண்பர்களின் சத்தம் கேட்கிறதே என நம்பிகையில்
"உடனே பின்னுக்கு பாருங்க உங்க எல்லாரையும் அவுட் பண்ணுறேன்" என்று சொல்லி கொண்டு ,
அந்த பழைய வீட்டை நெருங்க ..
சற்று தூரத்தில் வீட்டில் இருந்து ஒரு நிழல்
அது நம்ம தோழிகளில் யாரோ தான் என்று நினைக்க !
வீட்டில் போன என் தோழியை போன்றே
கருப்பு நிற ஆடை உடுத்திய அழகிய தேவதை போன்று குட்டி பெண் நின்று கொண்டு இருந்தாள்!
அவளிடம் "நீ யாரு? ஏன் இங்க இருக்கீங்க ?"என கேட்டேன்!
" இது என்னோட வீடு இங்கு நான் வசிக்கிறேன் "என்றாள்!
" நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? னு அந்த குட்டி பெண் கேக்க,"
நானும் என் தோழர், தோழியரும் கண்ணாம்பூச்சி ஆடி கொண்டு இருந்தோம் "
அவர்களை தேடி நான் இங்கு வந்தேன் என்றேன் !
அந்த குட்டி பெண்ணோ "என்னையும் உங்க விளையாட்டில் சேர்த்து கொள்ளுங்கள்" என்றாள்!
நானோ எதுவும் புரியாமல் திகைத்த படி," சரி நீங்களும் கலந்துக்கோங்க "என்றேன்!
அவளை ஒளிந்து கொள்ள சொன்னேன்!
நான் கண்டு பிடிக்கிறேன் என
அவளும் ஒளிந்து கொண்டாள்!
நான் கண்டு பிடிப்பேன் என்று
அன்று அவளை தேட தொடங்கிய நான் ,
இன்றும் அவளை தேடிக்கொண்டே இருக்கிறேன்!
அவள் யார் என் மனதை பறித்துச் சென்ற தேவதையா?
இல்லை உனக்கு மனதே வேணாம் என்று என் மனதை திருடி சென்ற ராட்சசியா?
என்றும் அவளின் நினைவில் நான்!
அவளை சிலர் பேய் என்றார்கள்!
அவளை அருகில் பார்த்த நான்
அவள் பேய் இல்லை ,அவள் பேய் என்ற போர்வையில்
தன்னை காப்பாற்றி கொள்ள வாழும் தேவதை என்றேன் !
அவளை ஒரு நாள் கண்டு பிடித்திடுவேன் என்ற
நம்பிக்கையில் கடக்கிறது
என் வாழ்வின் பயணம்