Author Topic: வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்?  (Read 249 times)

Offline MysteRy


வெங்காயத்தை வெட்டும் போது அதன் செல்கள் உடைந்து "அல்லினாசிஸ் ” என்ற என்ஸைமை உண்டாக்குகிறது. இது ஸல்பைட்டுகளைப் பிரித்து, கந்தக
அமிலங்களை உருவாக்கும். இவை சுலபமாக உடனே ஆவியாகும், வாயுவாகச் சிதைந்து காற்றில் பரவும். கண்களை அடையும் போது ஈரத்துடன் கலந்து நீர்த்த கந்தக அமிலமாக மாறும். இது கண் களை உறுத்த, அந்த எரிச்சலைப் போக்கக் கண்ணீர் உற்பத்தியாகும். வெங்காயத்தை நாம் உரிக்கும் போது, நாம் அழுவதற்கு இதுவே காரணம். வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்து வைத்துவெட்டினால் , அழுகை குறையும்.