Author Topic: உங்க முட்டி கருப்பா இருக்கா?  (Read 247 times)

Offline MysteRy


சீரான சரும நிறம் ஒருவரின் அழகை அதிகரிக்கும். சூரிய ஒளி மற்றும் வேறு சில காரணங்களால் உண்டாகும் சரும நிறமாற்றம், சீரற்ற சரும நிறத்தை உண்டாக்குகிறது. மேலும், முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் சிலருக்கு கருமையாக இருக்கும். கை மற்றும் கால் பகுதியின் மற்ற இடங்கள் வெண்மையாக இருக்கும்போது குறிப்பிட்ட முழங்கை மற்றும் முழங்கால் மட்டும் கருமையாக இருப்பதால் ஸ்லீவ்லெஸ் அல்லது ஸ்கர்ட் அல்லது மிடி போன்ற உடைகள் அணியும்போது, அணிபவருக்கு ஒரு அசௌகரியம் உண்டாகும். ஆகவே அந்த கருமை நிறத்தைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள் உண்டு. அதனை இப்போது பார்க்கலாம்.

...
பேக்கிங் சோடா...

பேக்கிங் சோடா ஒரு இயற்கையான சிறந்த ஸ்க்ரப் ஆகும். பொதுவாக சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கி கருமையை போக்க இந்த மூலப்பொருள் பெரிதும் உதவுகிறது. பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி 5 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் கழுவவும்.
...
வெங்காயம் மற்றும் பூண்டு...

இதனை கேட்பதற்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் கருமையைக் குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். ஒரு வெங்காயம் மற்றும் ஒரு பல் பூண்டை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முட்டிகளில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்யவும்.
15 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரால் கழுவவும். வெங்காயம் மற்றும் பூண்டை பயன்படுத்துவதால் உண்டாகும் வாசனையைப் போக்க, மென்மையாக சோப் கொண்டு கழுவிக் கொள்ளலாம்.

கழுவிய பின், ஒரு பங்கு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு பங்கு பன்னீர் சேர்த்து கலந்து முட்டிகளில் தடவவும். இது ஒரு சிறந்த மாயச்ச்சரைசெர். இதனை தொடர்ந்து செய்து வருவதால் விரைவில் அந்த கருமை மறையும்.

...
மஞ்சள், தேன் மற்றும் பால்...

மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் பால் ஒரு சிறந்த ப்ளீச். தேன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிறது மற்றும் இதில் அன்டி செப்டிக் தன்மை உண்டு.

மஞ்சளுடன் சிறிதளவு பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை கருமை உள்ள முட்டிகளில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விடவும். உங்கள் கைகளை நனைத்துக் கொண்டு, இரண்டு நிமிடம் உங்கள் முட்டிகளை நன்றாக தடவிக் கொடுக்கவும். பிறகு தண்ணீரால் கழுவவும்.
..
கற்றாழை..

கற்றாழை இயற்கையாகவே சருமத்தை வெண்மையாக மாற்ற உதவும் ஒரு மூலப்பொருள். இது சருமத்தை நீர்சத்தோடு வைக்க உதவுகிறது. சருமத்திற்கு சீரான நிறத்தை தர உதவுகிறது. மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதத்தை சீராக்க உதவுகிறது. கற்றாழை இலையில் இருந்து அதன் சாற்றை எடுக்கவும். இந்த சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து, தண்ணீரால் அந்த இடத்தை சுத்தம் செய்யவும். சில வாரங்களுக்கு தினமும் இரண்டு முறை இதனை பின்பற்றவும்.

..
ஆலிவ் எண்ணெய்..

சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வு. ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து முழங்கை மற்றும் முழங்காலில் தடவி நன்றாக தேய்க்கவும். இரவில் தூங்குவதற்கு முன் வாரத்திற்கு மூன்று முறை இதனை செய்யலாம். இதனால் உடனடியாக கருமை மறைகிறது.