Author Topic: என்னத்த சொல்ல  (Read 7 times)

Offline MysteRy

என்னத்த சொல்ல
« on: September 13, 2025, 08:26:09 AM »

ஒரு சமயம் கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன் கேட்டான்.. ”சாமி , ஒரு கோடி வருஷங்க்கிறது உங்களுக்கு எவ்வளவு நேரம்?“

இறைவனும் சிரித்துக் கொண்டே ”ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் ” என்றார்.

அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் ”அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி ? “

அவரும், ” ஒரு ரூபாய் போல ” என்றார்.

உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், ” அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் ” என்றான் மிகவும் அடக்கமாய் …

இறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே” நீ ஒரு நிமிஷம் பொறு மகனே “.. என்றாராம் …
😯😯

(ஒரு நிமிஷம் = 1 கோடி வருஷம்
😀😀)