Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
அமெரிக்காவையே பீதியின் உச்சத்தில் வைத்திருந்த சீரியல் கில்லர் எச்.எச்.ஹோல்ம்ஸ்!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அமெரிக்காவையே பீதியின் உச்சத்தில் வைத்திருந்த சீரியல் கில்லர் எச்.எச்.ஹோல்ம்ஸ்! (Read 48 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224696
Total likes: 28273
Total likes: 28273
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
அமெரிக்காவையே பீதியின் உச்சத்தில் வைத்திருந்த சீரியல் கில்லர் எச்.எச்.ஹோல்ம்ஸ்!
«
on:
September 12, 2025, 08:29:37 AM »
அந்நாட்களில், அமெரிக்காவில் நடந்த சீரியல் கில்லர் ஹோம்ஸ் வழக்கு பெரும் பரபரப்பிறகு உரியதாக இருந்தது. அந்த வழக்கு நாடு முழுவதையும் பதட்டத்திலேயே வைத்திருந்தது. ஹோம்ஸ் மற்றும் மக்களால் கோட்டை என்றழைக்கப்படும் அவரது பிரம்மாண்ட உணவு விடுதி பற்றி திடுக் திடுக் மர்மச் செய்திகளையே நாளேடுகள் சுமந்திருந்தன. அமெரிக்காவின் தலைப்புச் செய்தியாக ஹோம்ஸ் இருந்தார். மக்களுக்கு ஒவ்வொரு விடியலும் திகிலாவே விடிந்து கொண்டிருந்தன.
மேலும், 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் அவரைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் பிரசுரமானது. ஹோம்ஸ் நடத்திக்காட்டிய கொடூர கொலைகள் குறித்த நிகழ்வுகளை, கதைகளாக்கி பல திரைப்பட நிறுவனங்கள் காசு பார்த்து கல்லா கட்டியது.
ஹோம்ஸ் பற்றி எழுதப்பட்ட 'வெள்ளை நகரத்தில் பிசாசு" , எரிக் லார்சன் எழுதிய 'கொலை', மேஜிக், 'மேட்னெஸ் அட் தி பேர் தட்' டேவிட் பிராங்க் எழுதிய 'தி டார்ச்சர் டாகடர்' -(1975), ராபர்ட் ப்ளாச் எழுதிய 'அமெரிக்கன் கோதிக்"(1974) மற்றும் 'டிப்ரோவ்' தி ஷாக்கிங் ட்ரூ ஸ்டோரி' (1994). அடுத்தடுத்து, ஹோம்ஸ் ஆவணப்படங்கள், திரைப்படங்களின் பேசுபொருளாகிப் போனார். குறிப்பாக, இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸ் இயக்கிய 'ஹெவன் ஹர்ஸ்ட்(2017)' மற்றும் 'டெவில் இன் ஒயிட் சிட்டி(2019)" ஆகிய படங்களில் புகழ் பெற்ற ஹாலிவுட் கதாநாயகன் 'லியனார்டோ தி கேப்ரியோ' நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, எச். எச். ஹோம்ஸ், அமெரிக்காவின் முதல் சீரியல் கில்லர்(2004) ஆகிய திரைப்படங்களும், குறும்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் ஹோம்ஸ் கதைகளாக வலம் வரத் தொடங்கினார்.
#யாரிந்த ஹோம்ஸ்?
பெயர்: எச்.எச். ஹோம்ஸ்
பிறந்த நாள்: 1861 மே 16
இனம்: அமெரிக்கன்
பிறந்த இடம்: அமேரிக்கா, கில்மண்டன், நியூ ஹாம்ப்ஷயர்
பெற்றோர்: தந்தை-லேவி ஹார்டன் முட்ஜெட், தாய்- தியோடட் பக்
மனைவிகள்: 3 பேர். கிளாரா லவ்வரிங்,ஜார்ஜியா யோக், மிர்டா பெல்காப்,
இறந்த வயது: 34
இறந்த இடம்: மொயமன்சிங் சிறைச்சாலை, பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.
எச். எச். ஹாம்ஸ் 1861-மே 16 -ஆம் தேதி அன்று தியோடட் பேஜ் பிரைஸ் மற்றும் லேவி ஹார்டன் முட்ஜெட்டிற்கு மகனாகப் பிறந்திருக்கிறார். மொத்தம் 4 உடன்பிறப்புகளில் இவர் 3 ஆவதாக பிறந்தபோது., இவருக்கு, ஹர்மன் வெப்ஸ்டர் முட்ஜெட் என்ற பெயர் இயற்பெயராக இருந்திருக்கிறது. பின்னர், அடுத்தடுத்த நாட்களிலேயே அந்தப் பெயர் நிராகரிப்பட்டிருக்கிறது.
குடும்பத்தில் குழப்பம்...
ஹோம்ஸின் குடும்பம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் தான் இருந்திருக்கின்றனர். பணக்கார குடும்பமாக இருந்தாலும், ஹோம்ஸின் தந்தை முழுநேர குடிகாரராகவே வாழ்ந்திருக்கிறார்.
எனவே, குடும்பத்தில், சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. இதனால், ஹோம்ஸ் உள்ளிட்ட அவரது உடன்பிறப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தையின் கோபத்திற்கு ஹோம்ஸ் அடிக்கடி பலியாகி அவமானப் படுத்தப்பட்டுள்ளார். . இதனால், ஹோம்ஸ் அந்த இளம் பருவத்திலேயே, கடும் மன உளைச்சலில் துவண்டுள்ளார்.
மேலும், ஹோம்ஸ் பயின்ற பள்ளி மிக கண்டிப்புடன் பாடம் நடத்தியிருக்கிறது. அங்கிருந்த ஆசிரியர்களும் ஹோம்சுக்கு அச்சுறுத்தக் கூடியவர்களாகவே தெரிந்து இருக்கிறார்கள்.
ஹோம்ஸ் தனது வாழ்வில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் திருமணம், 1878 ஜூலை 4 ஆம் நாள் அன்று மனைவி கிளாரா லவ்வரிங். இவர் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவுடனேயே திருமணம் நடந்திருக்கிறது. அவர்களுக்கு, ராபர்ட் லவ்வரிங் என்ற மகன் இருந்திருக்கிறார்.
அவரது இரண்டாவது மனைவி மிர்தா பெல்காப் என்பவரை 1887 ஜன 28 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் லூசி தியோடட் ஹோம்ஸ் .பின்னாளில் ஒரு பள்ளி ஆசிரியையாக மாறிப்போனார்.
ஹோம்ஸின் மூன்றாவது திருமணம் கொலராடோவில் உள்ள டென்வர் நகரில் ஜார்ஜினா யோக் என்பவருடன் நடந்தது. இதனையடுத்து அவர் முதல் மனைவியை பிரிய முயற்சித்தார். அனால், விவகாரத்து கிடைக்கவில்லை.
இதனையடுத்து, அவர் 1877-ஆம் ஆண்தில், தனது 16 வயதில், உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று இருக்கிறார். அடுத்து வந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர், ஹோம்ஸ் வெர்மான்ட் என்ற பல்கலைகழகத்தில் மேற்படிப்புக்காகச் சேர்ந்தார். ஆனால், திடீரென அந்த பல்கலைக் கழகத்தில் இருந்து திடீரென விட்டு விலகினார்.
இந்நிலையில், அந்தப் பல்கலைகழக பாடத்திட்டத்தில் அவருக்கு நாட்டமில்லை என குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, ஹோம்ஸ் மிக்சிகன் பல்கலைக் கழகத்திற்குச சென்றார். அங்கே அவர் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையை முறைப்படிக் கற்றுத் தேர்ந்தார். மேலும், 1884 இல் ஒரு பட்டம் பெற்றார்.
இந்நிலையில், மிக்சிகன் பல்கலைக்கழகத்தில், மருத்துவ கல்வியை ஹோம்ஸ் பயின்று கொண்டுகொண்டிருந்தபோது, மருத்துவ ஆய்வகத்தில் இருந்து சடலங்களைத் திருடி, அவற்றின் மீது காப்பீட்டுப் பணத்தொகையை பெற்றுக்கொள்ளும் மோசடியில் ஈடுபட்து இருக்கிறார்.
அடுத்தடுத்து, சிரிசின்ன சின்ன மோசடிகளில் அவர் ஈடுபட்டார். பின்னர், சிகாகோவில் அவரது மோசடிகள் தொடர்ந்து இருக்கின்றது. நியூயார்க்கில் மாயமாய் மறைந்த சிறுவன், பிலடெல்பியாவில் மற்றொருவரின் மரணம் என சில பல வழக்குகளில் அவர் சிக்கினார்.அப்போது சிகாகோவில், தனது பெயரை ஹென்றி ஹோவர்ட் ஹோம்ஸ் என மாற்றிக் கொண்டார்.
இதனையடுத்து, 1886 ஆகஸ்டு மாதத்தில் ஓர்நாள், சிகாகோவில் வசித்த ஹோல்டன் மற்றும் அவரது கணவர் ஹூஸ்டனுக்குச சொந்தமான ஒரு மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார. அடுத்தடுத்த நாட்களில், ஹூஸ்டன் திடீரென்று மாயமாய் மறைந்தார். நீண்ட நாட்கள் அவர் வீடு திரும்பவில்லை. எனவே, அவர் இறந்துபோனார் என்று அவரது மனைவியும் உற்றார் உறவினர்களும் நினைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், ஹோம்ஸ் ஹூஸ்டனின் மனைவி எலிசபெத்திடம் இருந்து, அந்த மருந்து நிறுவனத்தை பெற்று நிர்வகித்தார். அடுத்தடுத்து வந்த நாட்களில், ஹூஸ்டனைப் போலவே, அவரது மனைவி எலிசபெத்தும் திடீரென, ஒருநாள் காணாமல் போனார்.
அப்போது, ஹோம்ஸ் அந்த நிறுவனத்தில் இருந்து மோசடி செய்து, பணத்தை திருடிக் கொண்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். பின்னர், அந்த மோசடிப்பனத்தில், ஒரு நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தில், பிரம்மாண்டமான ஒரு மூன்று மாடிகள் கொண்ட உணவாக விடுதியை கட்டி முடித்தார்.
அந்த பிரம்மாண்டமான விடுதிக் கட்டிடத்தை, அந்தப் பகுதிவாசிகள், 'கோட்டை" என்றே அழைத்து வந்தனர். ஆனால், அந்த பிரம்மாண்டமான விடுதிக் கட்டிடம் அடுத்தடுத்து வந்த நாட்களில், ஹோம்ஸ் நடத்திய கொடூரக் கொலைகளுக்கு உறுதுணையாய் இருந்தது. அங்கேதான் அத்தனை கொலைகளும் நடந்தேறின.
1893-ஆம் ஆண்டில் நடந்த கொலம்பிய கண்காட்சிக்கு வந்தவர்களுக்காக, அவர்களுக்கு விருந்தளிக்க, அந்த உணவாக விடுதிக்கு ' வேர்ல்ட்ஸ் பேர் ஹோட்டல்" என பெயரிடப்பட்டது.
பிற்காலத்தில், அந்த பிரம்மாண்டமான கட்டிடம் வரலாற்றில் மர்மமான பங்களாவாக இடம்பிடித்தது. மேலும், மர்மமான கதவுகள், பதுங்கு அறைகள், திடீர் படிக்கட்டுகள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய தளமாகவும், உள்ளே சென்றால் வெளியே வர முடியாத அளவுக்கு மர்மம் நிரம்பிய விடுதியாகவே பார்க்கப்பட்டது.
அந்த விடுதியில் ஹோம்ஸ் ஏராளமான் பெண்களை அடைத்து வைத்து இருந்திருக்கிறார். அவர்களை கவர்ந்து அவர்களை மயக்கி அங்கே அழைத்துக் கொண்டு வருவது அவரது வாடிக்கையாகிப் போனது.
பின்னர், ஹோம்ஸ் அந்த பெண்களை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி மகிழ்வாராம். அணு அணுவாய் துன்புறுத்தியா அந்த பெண்களைக் கொள்ளும் முறை மிககொடூரமாய் இருக்குமாம். மூச்சு முட்ட துடிக்கச் செய்து கொள்வது, தூக்கிலிட்டு கொள்வது என்ற பழக்கத்தை வழக்கமாக ஹோம்ஸ் வைத்து இருந்திருக்கிறார்.
கோரமான கொலைகளையும் தாண்டி ஹோம்ஸ் பசியால், தாகத்தால் துடிதுடிக்க வைத்து தவிக்க வைத்து சாகடிப்பாராம். பின்னர், இரன்படுகொலை செய்யப்பட அந்த பிரேதங்களை ஹோம்ஸ் அங்கிருக்கும், சுண்ணாம்பு குழிகளில் தள்ளி விட்டு புதைப்பதை வழக்கமாக் கொண்டுள்ளார். அந்த பிணங்களில் உள்ள எலும்புகள், உறுப்புகளை அறுத்தெடுத்து மருத்துவக் கல்லூரிகளுக்கு விற்று கொள்ளை கொள்ளையாய் காசு பார்த்திருக்கிறார்.
பிரேதங்களில் பணம் பார்த்த ஹோம்ஸ், அவ்வப்போது, கூட்டுச் சேர்ந்து காப்பீட்டு மோசடிகளும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அவரது கூட்டாளிகளில் ஒருவரான, பெஞ்சமின் பிட்செல் என்பவரம் இணைந்து, பெரும் காப்பீட்டு மோசடி ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். இதனையடுத்து,ஹோம்ஸ் அவரது கூட்டாளியான பிட்செல்லையே கொன்று, அவரத்து குடும்பத்துக்கு முறைப்படி செல்ல வேண்டிய 10,000 டாலர்கள் அமெரிக்க பணத்தை சுருட்டிக் கொண்டார்.
மேலும், கொல்லப்பட்ட அவரது நண்பர் பெஞ்சமின் பிட்செலின் மூன்று குழந்தைகளை உடனடியாகத் தீர்த்துக் கட்டியிருக்கிறார்.
இந்நிலையில், காப்பீட்டு மோசடிகளில் ஹோம்ஸின் கூட்டாளிகளில் ஒருவரான ஹெட்ஜ்பெத் ஏற்ற கைதியிடம் இருந்து போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. அதன்படி, போலீசார், பிலடெல்பியாவில் வைத்து, 1894நவ 17-ஆம் தேதியன்று, ஹோம்ஸை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
ஹோம்ஸ் கைது சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையினரின் பார்வை அவரது பிரம்மாணடமான விடுதிக் கட்டிடத்தின் மீது பாய்ந்தது. அதைப்பற்றி அப்பகுதியினரிடம் துருவித் துருவி போலீசார் விசாரித்தனர். அந்த கோட்டையில் மர்மங்கள் பல நிரம்பி இருப்பதை
போலீசார் மோப்பம் பிடித்தனர்.
அடுத்து காவல்துறையினர் அந்த விடுதியை அலசியபோது, பச்சிழங்குழந்தைகள் முதல் முதியோர் வரை ஏராளமான் எலும்புக்கூடுகளைக் கண்டறிந்தனர். ஹோம்ஸை போலீசார் 'முறைப்படி? " விசாரித்தனர். விசாரணையில் ஹோம்ஸ்தான் குற்றவாளி என்பது நிரூபணமானது.
மேலும் போலீசாரின் பலமான விசாரணையில், ஹோம்ஸ் மேலும், 27 கொலைகளை தன செய்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், அவரது பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. திருப்தியடையாத போலீசார் மீண்டும் துருவித் துருவி ஆய்வு செய்தனர்.
அப்போது ஹோம்ஸ் சுமார் 100 கொலைகளுக்கு மேல் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். ஆனாலும், அவற்றிகெல்லாம் ஆதாரங்களை போலீசாரால் சேகரிக்கவே முடியவில்லை. இறுதியில், ஹோம்ஸ்சின் கூட்டாளி பெஞ்சமின் பிட்செல்லை கொலை செய்த விவகாரத்தை வைத்தே ஆதாரங்களை திரட்ட முடிந்தது.
இறுதியில், ஹோம்ஸ் பிட்செல்லை கொலை செய்த குற்றத்திற்காக, நீதிமன்றக் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு, பிலடெல்பிய நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர், 1896 மே 7 ஆம் தேதி அன்று பிலடெல்பியா கவுண்டி சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்தடுத்த நாட்களிலேயே , ஹோம்ஸின் மர்ம கோட்டை தீக்கிரையானது. முற்றிலுமாய் அழிந்துபோனது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
அமெரிக்காவையே பீதியின் உச்சத்தில் வைத்திருந்த சீரியல் கில்லர் எச்.எச்.ஹோல்ம்ஸ்!