Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
காரில் ஏசி-யை போட்ட பின் இந்த பட்டனையும் 'ஆன்' பண்ணுங்க...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: காரில் ஏசி-யை போட்ட பின் இந்த பட்டனையும் 'ஆன்' பண்ணுங்க... (Read 139 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224696
Total likes: 28273
Total likes: 28273
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
காரில் ஏசி-யை போட்ட பின் இந்த பட்டனையும் 'ஆன்' பண்ணுங்க...
«
on:
September 10, 2025, 08:32:46 AM »
ஒவ்வொரு காரின் டேஷ்போர்டிலும் ஏராளமான பட்டன்கள் இருக்கும். இதில், ஏர் ரீசர்குலேஷன் பட்டனும் ( Air Recirculation Button) ஒன்று. ஏர்-கண்டிஷனுக்கான பட்டன்களுக்கு அருகே இந்த ஏர் ரீசர்குலேஷன் பட்டனும் வழங்கப்பட்டிருக்கும். சிறியதாக இருக்கும் ஏர் ரீசர்குலேஷன் பட்டனை எப்படி அடையாளம் காண்பது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
ஒரு காருக்கு உள்ளே யூ-டர்ன் ஏரோ (U-turn Arrow) இருக்கும். இதுதான் ஏர் ரீசர்குலேஷன் பட்டன். இந்த பட்டன் எதற்காக பயன்படுகிறது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் இந்த பட்டனை பயன்படுத்துவதே கிடையாது. இன்னும் ஒரு சிலரோ, இந்த பட்டன் எதற்காக பயன்படுகிறது? என்பது தெரியாமலேயே உபயோகித்து கொண்டுள்ளனர்.
வெயில் அதிகமாக சுட்டெரிக்கும் நேரங்களில், காருக்கு உள்ளே நீங்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க வேண்டுமென்றால், அதற்கு ஏர் ரீசர்குலேஷன் மிகவும் முக்கியம். காருக்கு உள்ளே உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் ஏர் ரீசர்குலேஷன் முக்கிய பங்காற்றுகிறது. எனவே ஏர் ரீசர்குலேஷன் பட்டனின் முக்கியத்துவத்தை தெரிந்து வைத்து கொள்வது அவசியமானது.
வெளிப்புறத்தில் வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில், நீங்கள் காரின் ஏசி-யை (A/C) 'ஆன்' செய்திருப்பீர்கள். ஏர் ரீசர்குலேஷன் பட்டனை பயன்படுத்துவதற்கு இதுவே உகந்த நேரம். பொதுவாக உங்கள் காரின் ஏசி வெளியே இருந்து காற்றை எடுக்கும். ஆனால் ஏர் ரீசர்குலேஷன் பட்டனை நீங்கள் 'ஆன்' செய்து விட்டால், ஏற்கனவே ஏசி-யில் இருந்து வெளியே வந்த குளிர்ச்சியான காற்றை ரீசர்குலேட் (Recirculate) செய்து கொள்ளும்.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், நீங்கள் முதலில் ஏசியை 'ஆன்' செய்தபோது, அதில் இருந்து குளிர்ந்த காற்று வெளியே வந்திருக்கும். அப்போது நீங்கள் ஏர் ரீசர்குலேஷன் பட்டனை 'ஆன்' செய்து விட்டால், வெளியில் இருந்து சூடான காற்றை எடுப்பதற்கு பதிலாக, ஏற்கனவே ஏசி-யில் இருந்து வெளிவந்த குளிர்ச்சியான காற்றை ரீசர்குலேட், அதாவது மறுசுழற்சி செய்து கொள்ளும்.
ஏர் ரீசர்குலேஷன் பட்டனை நீங்கள் எவ்வளவு நேரம் ஆன் செய்து வைக்கிறீர்களோ, அவ்வளவு நேரம் உங்கள் கார் கூடுதல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில், இந்த பட்டன் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் குளிர் காலங்களில் ஏர் ரீசர்குலேஷன் வசதியை பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவது நல்லது. குளிர் காலங்களில் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தினால், காருக்கு உள்ளே ஈரப்பதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ரீசர்குலேட் செய்யப்படும் காற்று, காருக்கு உள்ளே ஈரப்பதத்தை அதிகரிக்க செய்து விடும் என கார் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக உங்கள் காரின் விண்டோக்களில் பனி படர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் இந்த வசதியை குளிர் காலங்களில் தவிர்த்து விட்டு, வெயில் வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் மட்டும் பயன்படுத்தி கொள்வது சிறந்த முடிவாக இருக்கும். சூடாக இருக்கும் காருக்குள் அடுத்த முறை நுழையும்போது, ஏர் ரீசர்குலேஷன் பட்டனை பயன்படுத்துங்கள்.
உங்கள் காரின் கேபின் விரைவாக குளிர்ச்சியடைவதற்கு இது உதவி செய்யும். ஒருவேளை ஏர் ரீசர்குலேஷன் வசதியை பயன்படுத்திய பிறகும், உங்கள் காரின் கேபின் வேகமாக குளிர்ச்சியடையவில்லை என்றால், பிரச்னைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்போது நிபுணத்துவம் பெற்ற, நம்பிக்கையான மெக்கானிக்குகளை அணுகுவது நல்ல முடிவாக இருக்கும்.
ஏனெனில் இந்தியா போன்ற மிக வெப்பமான நாடுகளில் வசிப்பவர்கள், தங்கள் கார்களில் ஏர் ரீசர்குலேஷன் வசதியை எந்த நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் தயாராக வைத்திருப்பது மிகவும் நல்லது. பொதுவாக வெளிப்புறத்தில் இருக்கும் வெப்ப நிலையை காட்டிலும் காருக்கு உள்ளே வெப்ப நிலை மிகவும் அதிகமாக இருக்கும்.
கோடை காலங்களில் காரை ஒரு சில நிமிடங்கள் வெயிலில் நிறுத்தி விட்டு, மீண்டும் உள்ளே வந்தால், காருக்கு உள்ளே உட்காரவே முடியாத அளவிற்கு வெப்பம் சுட்டெரிக்கும். வெப்ப நிலை உயர்ந்து கொண்டே வரும் தற்போதைய சூழலில், ஏர் ரீசர்குலேஷன் வசதி சரியாக வேலை செய்தால், உங்களுக்கு சௌகரியமான பயணம் கிடைக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
காரில் ஏசி-யை போட்ட பின் இந்த பட்டனையும் 'ஆன்' பண்ணுங்க...