Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
சிறுநீரகக்_கல்_ஏற்படுத்தும் #அறிகுறிகள்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: சிறுநீரகக்_கல்_ஏற்படுத்தும் #அறிகுறிகள் (Read 28 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224248
Total likes: 28182
Total likes: 28182
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
சிறுநீரகக்_கல்_ஏற்படுத்தும் #அறிகுறிகள்
«
on:
September 01, 2025, 08:34:04 AM »
💊 #சிறுநீரக_கல்லை_வெளியேற்ற #வீட்டிலேயே_மருந்து_உள்ளது
சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் உருவாகி நகரும் வரை எந்த அறிகுறியினையும் ஏற்படுத்தாது.
♦ #_அறிகுறிகள்
* விலா எலும்பின் கீழ், பின்புறம், பக்கவாட்டில் வலி ஏற்படும்.
* இந்த வலி அடி வயிறு தொடைமடிப்பு வரை பரவும்.
* சிறுநீர் வெளியேறும் பொழுது வலி ஏற்படும்.
* சிவப்பு, ப்ரஷன் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.
* நாற்றமுடைய சிறுநீர் வெளியாகும்.
* வயிற்றுப் பிரட்டல், வாந்தி இருக்கும்.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
* ஜுரம் இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுக வேண்டும்.
♦பொதுவில் சிறுநீரக கல் உருவாக பல காரணங்கள் உண்டு…
* கால்ஷியம்,
* ஆக்ஸலேட்,
* யூரிக் ஆசிட்
* பரம்பரை
* போதிய அளவு தண்ணீர் குடிக்காமை
* சிலவகை உணவு
* அதிக எடை
* செரிமான கோளாறுகள்
* சில வகை மருந்துகள் இவற்றால் சிறுநீரகக்கல் ஏற்படுகின்றது. ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் இவைகளால் சிறுநீரகக் கல் கண்டறியப்படுகின்றது. அளவுக் கேற்றபடி சிகிச்சை முறை கையாளப்படுகின்றது.
💚 #கை_வைத்தியங்கள்❓❓❓
🔰#சிறுநீரககல்_வராமல்_தடுக்க❓❓
* தினம் 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
* அசைவ உணவையும், உப்பையும் அளவோடு உண்ணுங்கள்.
🇨🇭 சிறுநீரக வீக்கம், கல் பிரச்னைக்கு❓
💊தேவையான பொருட்கள்❓
சிறியாநங்கை – 25 கிராம்
வெள்ளருகு – 15 கிராம்
ஆடுதின்னாபாளை – 25 கிராம்
அவுரி – 25 கிராம்
மஞ்சள் – 25 கிராம்
நீர்முள்ளி – 50 கிராம்
நெருஞ்சில் – 50 கிராம்
சாரணைவேர் – 50 கிராம்
சிறுபீளை – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
கீழாநெல்லி – 50 கிராம்
அருகம்புல் – 50 கிராம்
ஆகியவற்றை ஒன்று கலந்து சூரணம் செய்துகொள்ளவும். மேற்படி சூரணத்தில் 2 கிராம் அளவு அதிகாலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீரக வீக்கம், நீரடைப்பு, கல்லடைப்பு ஆகியன தீரும்.
தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் சீரான நிலையில் வரும். சிறுநீரில் புரதம் வெளியேறுவது தடுக்கப்படும்.
🇨🇭 சிறு நீரக கல் குறைக்க❓💊
இஞ்சி – நெல்லிக்காய் ஜூஸ்
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.பிறகு, இதில்
இரண்டு டீஸ்பூன் சர்க்கரை,
ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு,கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர்
சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.
💊 சிறுநீரக கல் கறைய……💊
👉தேவையான பொருட்கள்❓
கருஞ்சீரகம்.
தேன்.
👉செய்முறை❓
கருஞ்சீரகத்தை நன்கு இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் கறைந்து சிறுநீர் அடைப்பு குறையும்.
💊சிறு நீரக கல் கரைய வேறுமுறை❓💊
வெள்ளரி விதை 5 கிராம்,
நெருஞ்சில் முள் 5 கிராம்,
கொள்ளு (காணம்) 5 கிராம்,
இவைகளை இடித்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வர கல் கரையும்.
🇨🇭 சிறுநீர் கழிக்கும்போது
கடுக்கிறதா..❓
நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும்.
அடிவயிற்றில், சிறுநீர்ப் பாதையில் கடுத்துக் கொண்டேயிருக்கும்.
அவ்வாறு, இருக்கும்போது……
💊வெள்ளை முள்ளங்கியை நன்றாக அலசி, சிறுசிறு துண்டுகளாக்கி, வெல்லத்தோடு அத்துண்டுகளையும் சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட வேண்டும். சுவையாகவும் இருக்கும்.
சிறிதாக இருந்தால் ஒரு முள்ளங்கி, பெரியதாக இருந்தால் அரை முள்ளங்கி சாப்பிட்டால் போதும்.
காலை, மாலை இருவேளை சாப்பிட்டால், சாப்பிட்ட ½ மணி நேரத்தில் கடுப்பு அகலும்.
மற்றபடி ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டு பக்கவிளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவது சிறு நீர்ப்பாதையை நலமாக வைக்கும்;
சிறு நீர்க் கோளாறு வராமல் காக்கும்.
வாரம் இருமுறை வாழைத் தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் சிறுநீரகக் கல் நீங்கும்.கொழுப்பு குறையும் எடுத்ததற்கெல்லாம் மாத்திரை சாப்பிட்டாதீர்கள்.
⭐ சிறுபீளை இலைச்சாற்றை 30 மி.லி. காலை, மாலை அருந்தலாம்.
⭐ கைப்பிடி அளவு நெருஞ்சில் காய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⭐அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.
⭐வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
⭐யானை நெருஞ்சில் இலைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.
⭐அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⭐ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.
ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
⭐மாவிலங்கபட்டைப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⭐அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.
கால் டம்ளர் முள்ளங்கிச் சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீரில் கலந்து பருகலாம்.
⭐ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
⭐மாதுளம் விதைப்பொடி அரை ஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து உண்ணலாம்.
⭐ஒரு ஸ்பூன் துளசி இலைச் சாறில் தேன் கலந்து உண்ணலாம்.
⭐அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த் தூள் சேர்த்து உண்ணலாம்.
⭐கால் ஸ்பூன் வெந்தயப் பொடியில் பன்னீர் சேர்த்து அருந்தலாம்.
⭐சுரைக்கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⭐ரோஜாப்பூ இதழ், நீர்முள்ளி அரைக்கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⏩ தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
⏩ கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.
⏩ பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
⏩ ரணகள்ளி,இலை தினம் ஒன்று தின்றால் சிறுநீரக கல் அடைப்பு வராது
⏩அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
⏩வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
⏩வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
⏩வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.
⏩பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
⏩புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
⏩கோவைகாய்த்தண்டுச் சாறை தினமும் காலை ஒரு அவுன்ஸ் வெறும் வயிற்றில் குடித்து வர சிருநீரக கல் கரையும்....
⏩ 40 கிராம் தொட்டாசிணுங்கி வேரை சிதைத்து இருநூற்றம்பது மில்லி நீரிலிட்டு நூறு மில்லியாக சண்ட காய்ச்சி வடிகட்டி பதினைந்து மில்லி அளவாக நாள்தோறும் மூன்று வேளை குடித்து வர சிறுநீரக கல் கரையும் .
⏩ பொங்கல் அன்று வீட்டு நிலையில் வைக்கும் கூரைப்பூ ( கண்ணுபீலைபூ) செடியை வேருடன் பிடுங்கி புது மண் சட்டியில் அப்படியே வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் மூன்று வேளை குடித்தவுடன் வலி குறையும் , சில நாட்களில் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது சில துளி ரத்தத்தோடு கல் வெளியேறுவதை நீங்கள் உணர்வீர்கள் .
⏩ தினசரி காலை வெறும்வயிற்றில்
பீன்ஸ் காயை250 கிராம் எடுத்து விதை நீக்கி 3/4 லிட்டர் நீர் விட்டு நன்குஅவித்து மிக்சியில்அடித்து அப்படியே குடித்துவிட்டு மேலும்
நீர்அருந்தி வர சிறுநீரக கல் கரையும்.
⭕ சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்❓❗
▶காரட், பாகற்காய், இளநீர்◀
இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன.
இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது.
கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
▶வாழைப்பழம், எலுமிச்சை◀
இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன.
இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.
▶அன்னாச்சி பழம்◀
இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன.
இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்:
கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை.
▶நார்ச்சத்து உள்ள உணவுகள்.◀
பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன.
பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கற்கள் வருவதையும் தடுக்கும்.
▶உப்பு
உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
சிறுநீரகக்_கல்_ஏற்படுத்தும் #அறிகுறிகள்