Author Topic: அழகான‌ கண்களுக்கு மஸ்காரா ஒரு கொடூர‌ வில்ல‍ன்...  (Read 99 times)

Online MysteRy


பெண்களைக் கவர்ச்சியாக காட்டுவது அவர்களின் கண்களே.. அந்த கண்களில் கவர்ச்சி இருக்கும் பெண்களை விரும்பாத‌ ஆண்களே இல்லை எனலாம். கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால், காளையருக்கு மாமலையும் ஒரு கடுகாம் என்று பாரதிதாசன் பாடியுள்ள‍ர். அத்தகைய கண்கள், சில பெண்களுக்கு மிகவும் சென்சிட்டிவ் ஆக இருக்கும். அத்தகைய‌ சென்சிட்டிவ் ஆன கண்களை உடைய பெண்கள், அவர்களின் கண்களுக்கு மஸ்காரா ஒரு வில்லன் தான். ஏனென்றால், அந்த மஸ்காராவில் உள்ள நார்ச்சத்துப் பொருள்கள் கண்களுக்கு முழுமுழுக்க‍ தீங்கு விளைவிப்பவை என்பதால் தான் சென்சிட்டிவ் கண்களை உடைய பெண்கள், இந்த மஸ்காராவைத் தவிர்ப்ப‍து கண்களுக்கு நல்ல‍து என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.