Author Topic: சாம்பிராணி புகையை காட்டுவதால் எத்தனை நன்மை இருக்கு தெரியுமா?  (Read 86 times)

Offline MysteRy


சிவன் கோவிலில் தினத்துக்கும் குங்கிலியம் கொண்டு புகை போடுறாங்களோ அவர்களுக்கு தெய்வீக ரகசியம் தெரியவருமென அகத்தியர் தன்னோட வாத காவியம்ன்ற நூலில் சொல்லி இருக்கிறார். இப்படி தெய்வீக ரகசியத்தினை தெரிஞ்சுக்கிட்டவங்களுக்கு எமதூதர்களிடமிருந்து விடுதலை பெறும் சக்தி கிடைக்கும். அதாவது மரணத்தை வெல்லும் சக்தி கிடைக்குமாம். அப்படி சக்தி கிடைச்சவங்க தான் மட்டுமல்லாம மத்தவங்களையும் காப்பாத்துவாங்க. இது சித்தர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று. அதனால்தான் சித்தர்களால் மற்றவங்களை மரணத்திலிருந்து காப்பாத்த முடிஞ்சது. அதை நாம பல கதைகளில் கேட்டிருக்கோம்.

தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரம் மாதிரியான சில காடுகளில் விளையக்கூடிய கருமருதுன்ற மரத்தினை கீறி, அதிலிருந்து வடியும் பிசினை சேகரிச்சு காயவச்சால் கிடைக்குறதுக்கு பேருதான் குங்கிலியம். இதைதான் நாம சாம்பிராணின்னு சொல்றோம். இந்த சாம்பிராணி புகை இந்துக்கள் வழிபாட்டில் மட்டுமல்லாமல் மதங்களை கடந்து எல்லா எல்லா மதத்தின் வழிபாட்டிலும் இடம்பெறுகிறது.

இப்படி மதங்களை கடந்து எல்லோரும் சாம்பிராணி புகை போட இறை நம்பிக்கை மட்டுமல்லாம வாசனைக்காகவும், காற்றில் கலந்து வரும் நச்சுக்கிருமிகளை அழிக்கவும் வீடு, கடைன்னு எல்லா இடத்திலும் சாம்பிராணி புகை போடும் வழக்கம் உண்டானது. முன்பெல்லாம் குழந்தைகள், பெண்கள் அதிலும் முக்கியமா கர்ப்பிணி பெண்கள், புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு வாரமொரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு ஊற்றி, சாம்பிராணி புகை காட்டுவது வழக்கம். சாம்பிராணி புகையை தலையில் காட்டுவதோடு புகையை சுவாசிக்கவும் செய்வாங்க. இதனால் கருப்பை சார்ந்த பிரச்சனைகள், தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் மாதிரியான வியாதிகள் தீரும். இளநரை, முடி கொட்டுதல், பொடுகு மாதிரியான தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் வராமல் இந்த சாம்பிராணி புகை தடுத்தது.

சாம்பிராணி புகை ஆஸ்த்துமா, வீசிங்க் பிராப்ளம் மாதிரியான சுவாசக்கோளாறுகளையும் போக்கியது. சாம்பிராணி புகையில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குறதாகவும் இப்பத்தைய ஆய்வுகள் சொல்லுது. சுத்தமான குங்கிலியம் கொண்டு போடும் சாம்பிராணி புகையால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால், ரெடிமேட் சாம்பிராணி புகையால் மூச்சடைப்பு, அலர்ஜி மாதிரியான தொல்லைகள் உண்டாகுவதை நாமே பார்த்திருக்கோம்..

அந்த ரெடிமேட் சாம்பிராணியில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயாண பொருட்களும், வாசனை பொருட்களும்தான் இதற்கு காரணம். முன்னலாம் மழைக்காலத்தில் சாம்பிராணி புகையுடன், காய்ந்த வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகையும் போட்டு மாலைவேளையில் வீடு முழுக்க காட்டுவாங்க. இதனால் கொசு தொந்தரவு இருக்காது. மழைக்காலத்தில் உருவாகும் நோய்க்கிருமிகள் தொற்றிலிருந்து நம்மை காக்கும். சுத்தமான குங்கிலியம் பர்வதமலை, கொல்லிமலை, கஞ்சமலை, சதுரகிரிமலை, அத்ரிமலை பகுதிகளில் கிடைக்கும். இப்பல்லாம் அங்கும் கலப்படம் நடக்குது. தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி வச்சு வாங்குறது நல்லது.