Author Topic: மிளகின் மருத்துவ குணங்கள்!  (Read 35 times)

Offline MysteRy


ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!

1. மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.

நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.

2. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஐட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.

3. உடல் எடையைக் குறைக்க உதவுவது:
நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கரு மிளகு அதன் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.

4. வாய்வை கட்டுப்படுத்துகிறது: சரியாக ஜீரணமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது. மிள்காய்ப்பொடிக்கு பதிலாக நாம் இனிமேல் மிளகுப்பொடியை பயன்படுத்தலாமே.

5 தலைப்பொடுகை ஒழிக்கும் மிளகு: கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலக்கவும். இந்தக் கலவையை தலையில் நன்றாக பரவலாகத் தடவவும்.
அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவும். இப்போது ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது. மறுநாள் ஷாம்பூ போட்டு குளிக்கவும்.