அன்பான நண்பி Oonjal - நீ ftc தந்த முத்து அல்லவா!
ஆயிரம் பேர் இருந்தாலும் நீ எனக்கு ஒரு உந்து சக்தி!
இன்முகத்தோடு நீ பேசும் பேச்சு!
ஈர்க்கின்றது என்னை உன்னிடம்!
உன்னைப் போல் குடும்ப பற்று மிக்க இல்லதரசியை,
ஊரில் கண்டதில்லை -அதை நான் வியக்கின்றேன்!எண்ணிய காரியங்கள் எளிதில் இயற்றிடுவாய்!
ஏற்றமுடன் வீறு நடை போட்டிடுவாய்!
ஐயமின்றி சொல்கின்றேன் வாழ்க்கையில் நீ ஜெயிப்பாய் என்று!
ஒற்றுமையை குடும்பம் நண்பர்களுடன் பேணிடுவாய்!
ஓயாமல் குடும்பதிற்காக உழைக்கும் சிங்கப்பெண் நீ!
ஒளடதம் இன்றி வாழ வாழ்த்துகின்றேன் இந்த அகவை தினத்தில்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு நண்பி,
அருமை சகோதரி oonjal
வாழ்த்துவது உன் அன்புத் தோழி தேன்மொழி