Author Topic: சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் கம்பு...  (Read 17 times)

Offline MysteRy


சிறுதானிய வகையை சேர்ந்த கம்பு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலத்தை தருகிறது.
மற்ற தானியங்களைக் காட்டிலும் கம்பில் அதிகளவு வைட்டமின்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.

தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.

வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் காலை, மதிய வேளைகளில் கம்பை உணவாக உட்கொண்டு வந்தால் உடல் வலுவடையும்.

அரிசியை காட்டிலும் கம்பில் நைட்ரஜன் சத்து, மாவு சத்து உள்ளது. உடலுக்கு பலம் தரக்கூடியது. வயிற்று புண்களை ஆற்றும்.

அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளும்போது அல்சர் குணமாகிறது, குடல் புண்களை ஆற்றும்.

கம்புவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் இதில் கஞ்சி தயாரித்து பருகலாம்.

முத்துபோன்ற தானியமான இது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது...