Author Topic: சிவப்பு கொய்யாவின் நன்மைகள்...  (Read 465 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226625
  • Total likes: 29010
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் நீர்ச்சத்து, சர்க்கரை குறைவாக இருக்கும்.
இதில் கரோட்டீனாய்டு என்ற நிறமி இருப்பதே இதன் சிவப்பு நிறத்திற்கு காரணம்.

கேரட், தக்காளிக்கு அடுத்து சிவப்பு கொய்யாவில் இந்த நிறமி அதிகம் காணப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பழம் என்றால் அது சிவப்பு கொய்யா தான், இது டைப்-2 நீரிழிவு நோய் வருவதை தடுப்பதுடன் அதிகப்படியான நார்ச்சத்து சர்க்கரையை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது.

இதில் விட்டமின் சி அதிகம் உள்ளதால் வைரஸ் மற்றும் பக்டீரியாக்களை எதிர்த்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதுமட்டுமின்றி விட்டமின் ஏ அதிகம் இருப்பதால், கண் தொடர்பான பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது.

குறிப்பாக இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும்.