Author Topic: நல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் எனச் சொல்வார்கள். எண்ணம் போலதான் வாழ்வ  (Read 27 times)

Online MysteRy


நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, வாழ்வில் நீங்கள் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமெனில், உங்களுக்கு மிக மிக அத்தியாவசியமானது நேர்மறை எண்ணங்கள்.

நம்மைச் சுற்றி எப்போதுமே பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால், நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தைச் செய்வோம்.

பாஸிட்டிவாகவும், வித்தியாசமாகவும் சிந்தித்தவர்களே வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள். அதனால் எப்போதும் நெகட்டிவாக யோசிக்காமல் தட்றோம், தூக்குறோம் என களத்தில் இறங்குங்கள்.

வெற்றி மட்டும்தான்.
அதேபோல, வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மகிழ்ச்சியை ஒருநாளும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

நம்முடைய ஒவ்வொரு நாளையும் பாஸிட்டிவாக மாற்ற, நாம் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம். கூடுதலாக, அன்பு செலுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள்.

ஏனெனில், சில நேரங்களில் அறிவால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. சிலவற்றை அன்பால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அன்பு உங்களிடத்திலிருந்தே ஆரம்பிக்கட்டும்..

நல்லதையே நினைக்கிற ஒருவனுடைய வாழ்க்கை என்பது "பழங்கள் நிரம்பிய கூடை"
என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.