Author Topic: கொடுக்காப்புளி"மருத்துவ குணங்கள்....  (Read 11 times)

Online MysteRy


செரிமானத்தை மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் கருப்பை நோய்களுக்கு மருந்தாகவும், வாதநோய் மற்றும் மூட்டு வலி நீக்கவும், பயன்படுகிறது. உடற்சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காப்புளி தரப்படுகிறது. உடல் எடை குறைய மிக அற்புதமான மருந்தாக கொடுக்காப்புளி பயன்படுகிறது. குடல் அழற்சி, பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்னைகளுக்கும் இது நல்ல மருந்தே. கொடுக்காப்புளி குடற் புண்களை குணப்படுத்தும். சுவையின் அடிப்படையில் கொடுக்காப்புளியின் வகை,காயாக இருந்தால் துவர்க்கும். பழமாக இருந்தால் துவர்ப்போடு இனிக்கும்.
அதிக ஊட்டச்சத்து மிகுந்த
கொடுக்காப்புளியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கிறது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாகாமல் தவிர்த்து புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும். இது Anti oxidant டாக செயல்படுகிறது. பொட்டாசியம் மற்றும் கால்சியம் எலும்புகளையும், பற்களையும் பலப்படுத்தும். பாஸ்பரஸ் செல்களை புத்துயிர்க்கிறது. இரும்புச்சத்து உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மேலும் வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B6 போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்துகிறது. இது தோல், நகம் மற்றும் முடியை வலுவடையச் செய்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்டிரால் LDL அளவை குறைக்கிறது. அதனால் உடல் பருமனும் குறைகிறது. HDL எனும் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. வைட்டமின் E இதில் அதிகம் இருப்பதால் என்றும் இளமையான தோற்றத்தையும் கொடுக்காப்புளி அளிக்கும். கொடுக்காப்புளி விதையில் Triterpene Saponins உள்ளதால் மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.கிருமிநாசினியாகவும், காச நோயை எதிர்க்கும் ஒரு எளிய மருந்தாகவும் பயன்படுகிறது. கொடுக்காப்புளி மரத்தின் பட்டை பேதி, சீதபேதி, மலச்சிக்கல் மற்றும் காசநோய்க்கு உகந்த மருந்து. கொடுக்காப்புளி இலையின் சாறு அஜீரணக் கோளாறுகள், தொடர் கருச்சிதைவு மற்றும் கல்லீரல், பித்தப்பை பிரச்னைகள், உள் மற்றும் வெளி காயங்களை சீராக்குகிறது. கொடுக்காப்புளி மற்றும் அதனுடைய விதையை சேர்த்து அரைத்து அந்த விழுதை Eye packகாக உபயோகித்து வருவதால் கண் எரிச்சல் மற்றும் வீக்கம், மற்றும் இதர கண் கோளாறுகளிலிருந்தும் விடுபடலாம். கொடுக்காப்புளி பட்டை மற்றும் இலைகளில் உள்ள Glucosidase & Amylase குளுக்கோஸ