Author Topic: கனவுகள் தொடரும் ✨  (Read 59 times)

Offline Lakshya

கனவுகள் தொடரும் ✨
« on: July 02, 2025, 10:47:34 AM »
கடிகாரம் நின்றாலும் கனவுகள் ஓய்வதில்லை...
காற்று திசை மாறினாலும் அவள் நம்பிக்கை மாறப்போவதில்லை...

தோல்விகளிலும் ஒரு வார்த்தை ( லட்சியம் ) போதும் மீண்டும் எழுந்து நடக்க முயற்சித்தால்...

வழி தெரியாமல் நடக்க துவங்கினாள், அவள் நிழல் கனவுகளோடு அவளை பின் தொடர்ந்தது...

மௌனத்தில் வெற்றி இருந்தது...விழிகளில் நீர் வற்றி போனது...இவள் சென்ற பாதையில் பூக்கள் இல்லை வெறும் கற்கள் மட்டுமே !!! பெண் என்பதால் தானோ ?
« Last Edit: July 02, 2025, 11:00:08 AM by Lakshya »