Author Topic: உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க..  (Read 92 times)

Offline MysteRy


கோடை காலத்தில் ஆரஞ்சு பழங்களை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ளது, இது நம் உடலை நீரிழப்புக்கு எதிராக போராட உதவுகிறது.
வெப்பத்திலிருந்து நிவாரணம் வழங்குவதில் பச்சை காய்கறிகளும், கீரைகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன
குறிப்பாக கோடை காலத்தில் மோர் குடித்தால், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தாது
நுங்கு சுளைகள் வெறும் 5 ரூபாய் முதல் விற்பனையாகிறது. இதனை வாங்கி உண்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும். சரும நோய்கள் அண்டாது.
இளநீர் குடிப்பதன் மூலம், உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். நீரிழப்பு பிரச்சனை இருக்காது.