Author Topic: நாளைக்கு எப்படி வாழ்க்கையை கம்பீரமா வாழுவே?  (Read 2341 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226279
  • Total likes: 28760
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


கல்லூரியில் படிக்கும் அந்த இளைஞன்
வேக வேகமாக வந்து தன் அறைக் கதவைப் பூட்டினான். மூச்சு வாங்கியது.

நடந்ததை நினைத்து வெட்கமாக இருந்தது.
தனியே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருக்கும் அவன், அன்று காலை தோசை மாவு வாங்க சைக்கிளில் போனான். மாவு கடையில் ஒரு கிலோ மாவை கவரில் கொடுத்தார்கள்.

அதை சைக்கிள் பின் கேரியரில் வைத்து இடது கையால் மாவைப் பிடித்துக் கொண்டு, வலது கையால் சைக்கிள் ஹேண்டில் பாரைப் பிடித்து ஓட்டிக்கொண்டு வந்தான்.

சாலையில் இருந்த பள்ளத்தில் சைக்கிள் இறங்கி ஏற, தோசை மாவு கைநழுவி ரோட்டில் பொத்தென்று விழுந்து உடைந்தது.சுற்றிலும் இருந்த அனைவரும் அவனையே பார்ப்பதை கவனித்தான்.

சிறு குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரையில் அவனையே பார்த்தார்கள். வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது. அவமானமாக உணர்ந்தான்.

சைக்கிளை வேகமாக ஓட்டியபடி அங்கிருந்து மறைந்தான். அறைக்குள்
ஓடி வந்து தாழிட்டு, தலையில் அடித்துக் கொண்டான்.

இன்று காலை உணவு கிடையாது என்று நினைத்தபடி குளிக்கப் போனான்.

குளித்து விட்டு வரும்போது அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்தால் அங்கே ஒரு பாட்டி நின்றிருந்தார்.

தம்பி… நீதானே மாவு பாக்கெட்டை
ரோட்டில் போட்டுட்டு வந்தே?’’

ஆமா பாட்டி.’’ அவனுக்கு அவமானமாக இருந்தது.

நான் பின்னாடிதான் வந்தேன். உன்னைக் கூப்பிட்டேன். நீ நிற்காம வேகமா வந்துட்டே!’’

இல்லை பாட்டி! மாவு விழுந்ததை எல்லாரும் பார்த்தாங்களா… அதான் அவமானமா ஆகிடுச்சு!’’

இதுல என்ன அவமானம்? ரோட்டுல ஒருத்தர் தடுக்கி விழுந்தா அவரை கிண்டலா நீ நினைப்பியா? நினைக்க மாட்டே இல்ல. அது மாதிரிதான் இது.

எல்லாருக்கும் சின்னச் சின்ன தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்.அதை மத்தவங்க கிண்டலா நினைக்கிறாங்கன்னு நீயே கற்பனை செய்துக்கிட்டா எப்படி?

உன் மாவு பாக்கெட்ல சின்னதா ஒரு ஓட்டைதான் விழுந்தது. அதில் ஒரு கை மாவுதான் ரோட்டுல கொட்டியது. மீதி பத்திரமா இதோ இருக்கு. இந்தா!’’
தேங்க்ஸ் பாட்டி!’’

இந்த சின்ன விஷயத்துக்கு சமூகத்தை பார்த்து வெட்கப்படுறியே? நாளைக்கு எப்படி வாழ்க்கையை கம்பீரமா வாழுவே? நிதானமா பிரச்னையைப் பார்க்கணும்.

இப்படி உணவுப் பொருட்களை வீணாக்கக் கூடாது. தோசை மாவைக் கொடுக்க மட்டும் இங்க நான் வரல. உன் மனநிலையை மாத்தணும்னு புத்தி சொல்லத்தான் வந்தேன்’’ என்ற பாட்டி சென்றார்.

சின்னச் சின்ன சறுக்கல்களுக்கு வெட்கப்பட்டு அதீத கற்பனை செய்து பதற்றப்படக்கூடாது’ என்று உறுதி எடுத்துக் கொண்டு தோசையை கல்லில் ஊற்றி கரண்டியால் வட்டமாய் விரித்தான் அந்த இளைஞன்.

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 274
  • Total likes: 1090
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
தேவைப்படும் கருத்து sis 🤕🤕