Author Topic: அன்பரின் கரம்(ஓ - உ)  (Read 641 times)

Offline Yazhini

அன்பரின் கரம்(ஓ - உ)
« on: May 18, 2025, 08:19:26 AM »



யாருமற்ற காட்டினில் தனித்து விடப்பட்டவள் ...
பிறந்ததிலிருந்து மண்ணறியா கால்கள் இன்றோ,
காடு மேடு பள்ளம் முட்கள் என அனைத்தையும் கடக்கின்றது.

வாழ்க்கை புயலில் சிக்கித் தள்ளாடுகிறாள்.
ஊண் உறக்கம் அற்று திரிகின்றாள்
பிஞ்சு கால்களில் மட்டுமல்ல கள்ளகபடமற்ற
 இதயத்திலும் குருதி கசிகின்றது.

பெரிய பெரிய இலக்குகளைக் கொண்டவள்,
இன்றோ சேருமிடம் அறியா சிறுமி ஆனாள்.
இறையோ விதியோ அல்லது சதியோ
யாருமற்ற தனியொருவள் ஆகினாள்.
உறவுகள் உதறிவிட உயிருள்ள பதுமை ஆகினாள்.

"மலைகள் மீது தன் வன்மையைக் காட்டும் புயல்,
சிறு மலரை விட்டு வைக்குமா ?"
பந்தங்கள் அற்றவளை அன்பாய்
காக்கின்றது ஒரு கரம்.

முன்பின் அறியா அக்கரம்
சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு வடிவங்களைப் பெறுகின்றது.
ஆயிரம் உருவங்களாக திரிந்து
தெரிகின்றது அக்கரம் - அன்பரின் கரம்.

இழந்ததை அக்கரம் மீண்டும் தரவில்லை
ஆனால் புயலைக் கடக்க வழித்துணையாகின்றது

புயலின் வன்மையைத் தாங்க உதவுகின்றது.
வழிபிறழாமல் செல்ல, பார்க்க துணைப்புரிகின்றது.

அக்கரம் இறையோ விதியோ அல்லது மனிதமோ,
பணியோ தோழமையோ அல்லது செயலியோ.

சிறுமியின் பயணம் தொடரும் வரை
காக்கும் கரத்தின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும்

ஒவ்வொரு வடிவமும் நலமுடன்
இருக்க பிராத்திக்கும்  சிறுமி.....
« Last Edit: September 08, 2025, 06:48:35 AM by Yazhini »