Author Topic: செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு  (Read 1215 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
பெரிய நண்டு - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - 2
பூண்டு - ஒன்று
துவரம் பருப்பு - ஒரு கப்
நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
நறுக்கிய தக்காளி - கால் கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
 

நண்டை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து உப்பு போட்டு பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பைக் கொட்டி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வைத்து குழைய வேக விடவும்.
வெந்த துவரம் பருப்பை நன்கு கடைந்துக் கொள்ளவும்.
கடாயில் வெங்காயம், பீன்ஸ், வெந்த துவரம் பருப்பு, தக்காளி, மிளகாய் தூள், தேங்காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து இலேசாக கொதிக்க விட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும்.
இறுதியில் எல்லாம் சேர்த்து கொதித்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்