Author Topic: நான் சொல்லாத பதில் !  (Read 839 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1940
  • Total likes: 6041
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
நான் சொல்லாத பதில் !
« on: May 17, 2025, 01:05:33 PM »

நான் சொல்லாத பதில்

உன் ஒரு நிமிடப் பார்வை,
கவிதையாக மாறி வந்தது,
மழையின் மணம் போல,
மௌனத்தில் இசை போல.

அந்த கணம் நீ என்னைத் தொட்டாய்,
பார்வையின் புன்சிரிப்பால்,
முகமூடி அணிந்த காலத்திலும்,
மனம் முழுக்க உனை உணர்ந்தேன்.

அதுவே எனக்கான கவிதை,
என் வரிகளுக்குள் உயிராய்
மறைந்திருக்கும் உன் பார்வை
கேட்டது ஒன்றே ஒன்றுதான்
"உன் காதல் நிலையானதா?"

உன்னிடம் நான்
மௌனமானேன் ஆனால்
நான் சொல்லாத பதில் ஒன்று
"நீ பார்த்த அந்த ஒரு நிமிடம்,
உனக்காக நான் எழுதிய வரிகள்
உலகின் மிக அழகான காப்பியம்"

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1277
  • Total likes: 4408
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நான் சொல்லாத பதில் !
« Reply #1 on: May 17, 2025, 01:22:53 PM »
மச்சி பீலிங்ஸ் தூக்கலா இருக்கு மச்சி  :D :) :)

உங்க காப்பியத்தை
மழையை வேடிக்கை பார்த்து கொண்டே
ஒரு காப்பி கோப்பையோட
வாசிச்சிட்டு இருக்கேன்

NEXT waiting  :) :)


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "