Author Topic: ✨✨✨தொடுதல்🤝  (Read 476 times)

Offline Yazhini

✨✨✨தொடுதல்🤝
« on: May 02, 2025, 06:28:07 AM »


கதிரவனின் தொடுதல்
விடியல் தருகிறது.
வண்டின் தொடுதல்
 அரும்பை மலராக்கின்றது.
காற்றின் தொடுதல்
 இசையை உருவாக்குகின்றது.
இசையின் தொடுதல்
 மனதை இளக்குகின்றது.
உணர்வுகளின் தொடுதல்
 கவிதைகளை உருவாக்குகின்றது.
மனங்களின் தொடுதல்
 மனிதத்தை உயிர்பிக்கின்றது.
பல நேரங்களில்
சிறு தொடுதல்
ஆறா பலகாயங்களை
எளிதாக ஆற்றிவிடுகின்றது.
« Last Edit: May 02, 2025, 07:41:43 AM by Yazhini »