Author Topic: மௌன காதலின் நிழல்  (Read 952 times)

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 308
  • Total likes: 647
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
மௌன காதலின் நிழல்
« on: May 05, 2025, 11:27:36 AM »
மௌன காதலின் நிழல்

நெடுந்தூரம் நடந்த காதல்,
நிஜமா, நிழலா எனக்கே தெரியவில்லை...
அவனது ஒரு சிரிப்பு போதும்,
என் உலகமே மலர்ந்துவிடும் போலிருந்தது.

அவன் ஒரு ஆசை...
அது அசையும் போதெல்லாம்
நான் அடிமையாய் மாறினேன்.
என் கை வளைலின் ஒசை,
அவன் காதில் இசை போல நுழைந்தது...

என் காலில் கலசங்கள்,
அவன் ஹரமோனியில் ஒத்துசென்றன...
என் நடையைக் கவிதை போல ரசித்தவன்,
ஆனால் என் நெஞ்சம் கவிதையா கிடையாது —
அது இரத்தம் ஓடும் வலி.

அவனைப் பார்த்த அந்த கணமே,
இறைவனிடம் நான் பாவம் செய்தேன்!
அவனுக்காகவே என் இதயத்தை
பரிகொடுத்து விட்டேன்...

இன்று அது வீணாகிவிட்டதா?
அல்ல, அது இன்னும் உயிரோடு
தவிக்கிறது... தேடுகிறது...

எங்கே சென்றாய் என் கள்வனே?
அடையாளம் இல்லாமல் மறைந்தபினும்,
உன் வாசல் கூட என் கனவுகளில் உள்ளது.

நீயோ நகர்ந்துவிட்டாய்,
நானோ நின்றுவிட்டேன்...
உன் மனநிலையிலேயே இன்று என் நிலை!