Dear RJ & DJ
இந்த வார இசைத் தென்றல் நிகழ்ச்சிக்கான எனக்கு பிடித்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆவாரம்பூ
ஆவாரம்பூ 1992 ஆம் ஆண்டு வெளியான டீன் ஏஜ் காதல் திரைப்படமாகும் , இது பரதன் இயக்கியது மற்றும் கேயார் தயாரித்தது . 1980 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான தகராவின் மறுஆக்கம், இதில் வினீத் , நந்தினி மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர் . இப்படத்தில் நடித்ததற்காக நாசர் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருதை வென்றார் .
இப் படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
பாடல். பாடகர்(கள்)
"ஆலோலம் பாடி" இளையராஜா
"அடுக்கு மல்லி
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
, எஸ்.ஜானகி
"மந்திரம் இது" கே.ஜே. யேசுதாஸ்
"நாடி ஓடும் கரையோரம்" எஸ்.ஜானகி
"சாதிஞ்சனே" கிருஷ்ணசந்தர்
"சாமி கிட்ட சொல்லி" எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல்
ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
பிடித்த வரிகள்
சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊர் எங்கள் பிள்ளை என்று
இன்று சொல்லக் கூடும்
உலகம் உந்தன் சொந்தமென்று
உந்தன் உள்ளம் பாடும்
நீ யாரோ அன்பே அமுதே….