Author Topic: ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய 14 எளிய விதிகள்:  (Read 618 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/



1. கோபம் தான் உன் முதல் எதிரி, அது வந்து போகட்டும் தவறில்லை, ஆனால் அது உன்னை ஆள விடாதே.

2. சந்தோஷமாக இருக்க மனிதர்களோ, பொருளோ தேவையில்லை. ஆரோக்கியமான, நேர்மறையான நல்ல மனமே தேவை.

3. உங்களை வெறுப்பவர்கள் தான் உங்கள் மிகப்பெரிய விளம்பரதாரர்கள், அவர்களை அதற்கேற்ப பயன்படுத்துங்கள்.

4. குடும்பம் என்பது இரத்த சம்பந்தம் மட்டும் அல்ல.

5. 24 மணி நேரத்திற்கு மேலாக யாருடனும் கோவத்திலோ, சண்டையிலோ இருக்காதீர்கள். மன்னித்து விடுங்கள், அல்லது மன்னிப்பு கேளுங்கள். தவறில்லை.

6. உங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை கற்றுக்கொள்வது அவசியம். போரில் தாக்கும் ஈட்டியை விட, காக்கும் கேடயமே முக்கியம்.

7. உடற்பயிற்சி கூடத்தை விட சிறந்த சிகிச்சைக்கான இடம் எதுவும் இல்லை.

8. கவனத்துடன் சாப்பிடுங்கள். சர்க்கரை தவிர்க்கவும், புரோட்டீன் நிறைய சேர்க்கவும்.

9. மதிப்புள்ள ஒரு பெண்ணிடம் செல்லுங்கள், உங்கள் மதிப்பை உணரும் பெண்ணிடம் செல்லுங்கள்.

10. பிறர் மதிக்கும் வாழ்க்கைக்கு, பொன், பொருள் அல்ல. உங்கள் புரிதலே அடிப்படை.

11. ஒரு வருமான ஆதாரம் என்பது இப்போதெல்லாம் பத்தாது. குறைந்தது 3 வருமான வழிகளை கண்டுபிடியுங்கள்.

12. தாயை நேசியுங்கள், பாதுகாத்து பராமரியுங்கள். உங்கள் தந்தையை மதித்து நேசியுங்கள், அவரை பெருமைப்படுத்த உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்!

13. இன்னொரு மனிதனை ஒருபோதும் தாழ்வாக நினைக்காதீர்கள்.

14. தினமும், காலை மற்றும் இரவு பிரார்த்தனை செய்ய மறக்காதீர்கள். ஏனென்றால், கடவுளுடன் இருக்கும் மனிதன் எல்லோருடனும் இருக்கும் மனிதன்.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.