Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 367  (Read 922 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 367

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Madhurangi

புதுமைகள் பல கண்ட களம் தமிழகம் ..
பழமை மாறா மாநிலம் நம் தமிழகம்..
எண்ணற்ற பண்பாடுகளின் சுவை..
அறுபத்திநான்கு கலைகளின் கலவை..

இணையற்ற இலக்கியங்களினதும் இயல்பியலினதும் தாய்நிலம்..
நல் விவசாயம் உலகறியச்செய்த விளைநிலம்..
தனி சங்கம் கொண்டு தமிழ் வளர்த்த நன்னிலம்..
புனித இறையன்பு எங்கும் நிறைந்த அருளிலம்..

மதங்கள் பல கண்டாலும் மனதால் ஒன்றான குடிகள்..
இனங்கள் பல கண்டாலும் அன்பில் வாழும் மக்கள்..
ஒற்றுமை என்னும் ஒற்றை சொல்லில் மிளிரும் தமிழகம்..
நட்பெனும்  உணர்வே மேலோங்கிய புனிதமிகு தேசம்..

உணர்வோடு உணவிலும் அறுசுவை கண்டோம்..
விருந்தோம்பல் என்றால் இதுதான் என்று  உலகறிய செய்தோம்..
அன்போடு வீரமெனும் குணமும் உண்டு ..
எதிரியையும் அரவணைக்கும் மனித நேயமும் உண்டு..

மாசற்ற ஆன்மீகத்தின் பிறப்பிடம்..
ஆழ்ந்த அறிவியலின் புகலிடம்..
தமிழகத்தின் எழில் காண கண் கோடி வேண்டும்..
தமிழகத்தின் புகழ் பாட நா பல வேண்டும்..






« Last Edit: April 07, 2025, 03:08:07 PM by Madhurangi »

Offline KS Saravanan

சங்கத் தமிழ் கொண்ட தமிழ் திருநாடு..!

தென்கடல் சூழ்ந்த நம் தென்னாடு
செழிப்பின் பெயர் கொண்ட தமிழ் நாடு..!
பாரம்பரியம் பதிந்த நம்நாடு
பண்பாட்டில் சிறந்த தமிழ் நாடு..!

மதுரை மல்லிகை வாசனை தூவி
சித்தர்கள் வாழ்ந்த சிவபூமி
காஞ்சியின் கலைஞர்கள் கவி பாடி
சங்கத் தமிழின் புலமை பாரீர்..!

பொதிகை மலையின் தென்றலோ
அகத்தியரின் தமிழாய் வீசுதே
தாமிரபரணியாய் பிறந்து
தமிழரின் தாகம் தீர்க்குதே..!

நாட்டியம் தந்த நடராசர்
சிதம்பரத்தின் ரகசியம் கேளிர்
மேல தாள நாதஸ்வரம்
இசைச் செல்வங்கள் எங்கும் வாழும்..!

மாடங்களும் சிற்ப கோபுரங்களும்
நம் கலைகளை சொல்கிறதே
தமிழரசனின் புகழ்ப்பாடி
கல்லனையும் தங்கமாய் இருக்கிறதே..!

வாழையிலைகளின் பெருமைகள்
அறுசுவை உணவுகள் சொல்லிடுமே
காஞ்சி பட்டின் மேன்மைகள்
பெண்களால் இன்னும் மிளிர்கிறதே..!

சேரர் சோழர் பாண்டியர் பெருமை
பாரதம் கடந்தும் சென்றனவே
அகிலத்தில் வெற்றி வாகை சூடி
தமிழரின் வீரம் நிலைநாட்டினரே

மண்ணும் மொழியும் இணைந்து
நம் உயிரில் ஒன்றாய் கலந்ததே
தமிழோடு பேசி தமிழ் மண்ணில் விளையாடி
தாய்நாட்டை காப்போமே..!

தலைமுறையெலாம் தலைக்கனத்தோடு
இதை இன்னும் வலிமையாக்க வேண்டுமே
கலைகளில் நம்மை காணும் உலகம்
தமிழின் ஒளியில் நடைபோடுமே..!

« Last Edit: April 07, 2025, 02:02:09 PM by KS Saravanan »

Offline Titus

தமிழ்நாடு தெய்வ மண் இது,
தீயெழுந்தும் நம்மை ஏமாற்றாது.
வீழ்ந்தாலும் எழும் தமிழர்க் குணம்,
விடாமுயற்சி நம் சுடரான உணம்!

கடல் கடந்து கனவைக் கண்டோம்,
கனிமொழியால் உலகை வென்றோம்.
பசுமை நிலம், உழைப்பின் அடையாளம்,
பாடுபடும் கைகளின் பெருமை ஏராளம்.

நம்மை தடுத்து நிறுத்தும் ஒன்று இல்லை,
நம்பிக்கையே நம் முதற்கொடி துல்லியமாய்.
ஓரமாய் நிற்கும் தடைகளை தாண்டி,
ஓங்கி வளர நம்மிடம் தீ உண்டு காந்தி!

பொதுமக்கள் பலம் நம் தாய் மண்ணில்,
புதிய நாள் பிறக்கும் நம் தோள் வலியில்.
தமிழ்நாடு – வெற்றிக்கு அடையாளம்,
முன்னேற்றப் பாதையில் நீ தான் தீப ஒளி
நாணம்!
தமிழ்நாடு – திரும்பவும் எழும் தீபம்!

தமிழ்நாடு – வீரத்தின் வேரிடம்,
தீயிலிருந்தும் சுடராய் எழும் செம்மணிடம்.
வீழ்த்தினாலும் வீழாத தமிழர்க் குணம்,
விடாமுயற்சி என்ற மழையில் நம் பயணம்!

கடல் கடக்கும் கனவுகள் நம் சொத்து,
உலகையே வென்ற தமிழரின் புத்தி முத்து.
பசுமை நிலம் நம் உழைப்பு பாடல்,
கைகள் பேசும் வெற்றியின் நிதர்சனம் தாளம்.

அடக்க முடியாத நம் மனத் தீ,
நம்பிக்கையில் திகழும் நம் வளர்ச்சி வீதி.
தடைகள் தோன்றினாலும் பயம் இல்லை,
தன்னம்பிக்கையோடு உச்சிக்கு போவது கையில்!

நம் தோள்கள் நம்பிக்கையின் சிலைகள்,
புதிய பொலிவுக்கு அடித்தளம் செய்பவர்கள் நாமே!
தமிழ்நாடு – வெற்றியின் வாழ்வியல் பாடம்,
உலகை குலைக்க நம்மிடமே தீப ஒளி ஆடம்!

 
« Last Edit: April 07, 2025, 05:49:41 PM by Titus »

Offline Asthika

என்னைத் தாலாட்டிய மொழி
எனதருமைத் தாய் மொழி
என் இனிய தமிழ் மொழி
எண்ணமெல்லாம் நிறைந்த மொழி

என்னை நான் தொலைத்த போது
என்னுள்ளே புதைந்த போது
எண்ணெய் ஆக மிதந்து என்
எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி

இதயத்தின் நாளங்கள் முஹாரி மீட்டினாலும்
இனிமையான கல்யாண ராகம் பாடினாலும்
இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய்
இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே

முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில்
முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும்
முகவரி இழக்காது இலக்கிய உலகில்
முத்தாக மிளிரச் செய்யும் இனிய மொழி

கம்பன் என்றொரு கவிஞனும்
கர்ஜித்த பாரதி என்னும் புலவனும்
கருதுமிழ்ந்து கவிதை தந்த பாரதிதாசனும்
கண்ணதாசன் என்னும் கவியரசனும்

எப்போதும் அணைத்துக் கொண்ட மொழி
எப்பொழுதும் கவிபாடிக் களித்த மொழி
என்னுடல் கருகிச் சம்பலாகினாலும்
என் சம்பலோடு பூத்து கமழ்ந்திருக்கும் தமிழ் மொழி..

தமிழ் என் உயிர் மூச்சு,
தமிழ் என் பிறவிப் பாட்டு,
பாரத பூமியில் பெருமை சேர்த்த,
தமிழ் தாய் என் பாராட்டே!

சங்கம் எழுதிய மொழி நம்மது,
சந்திரன் நிழலாய் நின்ற மொழி,
பாரதத்தின் முத்தாகப் பொலியும்,
தமிழின் மரபை பாடுவோம்!

பாரத நிலத்தில் பளபளக்கும்,
தமிழ் செம்மொழி பெருமை,
சான்றோர்களின் சொற்பொழிவாகி,
சிறப்புடன் உலகம் சுற்றும்!.

தமிழ் என் நெஞ்சின் நடுவே,
தமிழ் என் சொல் மலர்ந்த பூவே,
இந்திய மண்ணின் அன்னையாய்,
தமிழ் நம் வாழ்வின் ஒளியே!

தமிழ் என்ற வார்த்தைக்கு ஒட்டுமொ[த்த தமிழினிததை ஒன்று சேர்க்கும் சக்தி வாய்ந்தது

தமிழன் இவ்வுலகில் கால்பதிக்காத
இடம்தான் உண்டோ !! 
 தமிழன் என்று சொல் தலைநிமிர்ந்து நில்../color]

Offline சாக்ரடீஸ்


தமிழ் மொழி - தாய் மொழி - உச்சியின் உச்சி
அது வெறும் மொழி அல்ல
அது நம் அடையாளம்
அது நம் சுவாசம்
உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளும்
பொறாமைகொள்ளும்
தமிழ் மொழி ஒரு பேரதிசயம்
தமிழி மொழி  பூமியின் பேரழகு

தமிழரின் கைகள்
கட்டிய கட்டிடங்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல
அது நம் நினைவுகளை உயிர்ப்போடு
வைத்திருக்கும் கோட்டைகள்

தமிழரின் எழுத்துக்கள்
அது வெறும் கவிதைகளோ செய்யுள்களோ அல்ல
அது நம் மொழியின் வேரை  வாழவைக்கும்  தீர்மானங்கள்

தமிழ்நாடு
இது குமரி கண்டத்தின் மிச்சம்
இது கையில் கட்டுப்படாத காற்று
இது இருளை வெல்லும் ஒளிச்சுடர்
சேரர், சோழர், பாண்டிய அரசர்கள்
வெறும் செங்கோல் வைத்திருந்த ராஜாக்கள் அல்ல
கடல் கடந்து தமிழ் கொடியை வையகத்துக்கே நட்டவர்கள்

நம் வரலாறு அனைத்தும் அழிக்கப்படுகின்றது
எனவே மறந்த, மறைக்கப்பட்ட வரலாற்றை
மீட்டெடுக்கும் முயற்சியில்
திராவிடம் என்ற பேராயுதத்தை எடுத்துள்ளோம்

அயோத்தி தாசரின்
திராவிட சிந்தனை வரலாற்றை புரட்டி போட்டது 
இரட்டைமலை சீனிவாசனின்
உண்மைகள் மனுநீதியை கிழித்து போட்டது
பெரியார் ஈ வெ ராமசாமியின்
போராட்டங்கள் மக்கள் சிந்திக்க விதை போட்டது
பேரறிஞர் அண்ணாதுரையின்
எளிமையான உரை வெகுஜன மக்களை அரசியலுக்கு இழுத்து
கலைஞர் கருணாநிதியின்
பேனா பாமரமக்களுக்கு எல்லோருக்கும் எல்லாம் என்றது

ஆனால் இன்று
நம் மொழி, கலை,
மருத்துவம், அடையாளம், மாநில சுயாட்சி ஆகிய
அனைத்தையும் ஆரிய கூட்டம்
கையால் அல்ல கவிதையால் அல்ல
கொள்கையால் அழிக்க பார்த்துக்கொண்டு இருக்கின்றது
2௦௦௦ வருடங்களின் நீதி
காவி சாயத்தால் கரையக்கூடாது
எதிர்த்து போராடவேண்டும்
திராவிடர் என்பது போராளி
திராவிடம் என்பது பாசறை அல்ல போர்க்களம்

நம் முன்னோர்கள் தியாகங்களை
எண்ணத்தில் வைத்து கொண்டு
எதிரிகளை எதிர்த்து போராடுவதுதான்
உண்மையான தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
வெறும் கொண்டாட்டமாக இல்லாமல்
விழிப்புணர்ச்சியாக இருக்கவேண்டும்

மனிதநேயம் - சமத்துவம் - சமூகநீதி போற்றுவோம்

குரல் கொடுப்போம் வேராய் நிமிர்வோம்
எம் தமிழ் வாழ்க வாழ்க !

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


Offline Lakshya

தமிழ் நாட்டின் அடையாளமே தமிழ் மொழியே...
தனித்துவம் கொண்ட மொழியே, நீ முத்துப் போல் விலைமதிப்புள்ள பொக்கிஷம்...கோபுர நிழலில் கனியும் கதைகள்,
கருணையால் நெஞ்சை நனைக்கும் மொழி நீ தமிழ்மொழி...

வார்த்தைகள் இல்லாமல் பேசும் பார்வை...
எழுத்துக்களால் உணர்வு தரும் ஓவியமே...
அன்பும் அறமும் கலந்து பேசும் பாச மொழியே நீ தமிழ் மொழி...

நெஞ்சை நனையவைக்கும் நீர்த்துளி சொற்கள் கொண்ட அமுதே...
நான் எங்கு சென்றாலும் தமிழே என் உயிர் நிழல்!!!

மாடங்கள் சொல்லும் சோழர் சுவடு,
மண் வாசலில் துளிர்க்கும் மரபின் மெழுகு.
மணப்பாறைகள் போல நம் வார்த்தைகள்,
மணந்தாராய் நெஞ்சில் தங்கும் சந்தனங்கள்.

படிக்கப் படிக்கக் காதல் கொல்லும் மொழியே...
நீ தோன்றி பலாயிரம் வருடங்கள் ஆன பின்னும் உன் மதிப்பு குறையாமல் நிலைத்திருக்கிறாயே, இதுவே சாதனை...

தாலாட்டும் காற்றின் இசை மொழியே,
சங்கம் காலம் சொல்லும் சான்று... சிறப்பான வரலாறு நம்மோடு வாழ்ந்து...
பாரதத்தின் நெஞ்சில் தோன்றும் தமிழ் ஜோதியே,
நீ ஆறாக செல்லும் பாதை நீளமானது...

தொட்டதும் நெஞ்சை நனைக்கும் ஓசையே...
சிந்தையில் வாழும் தாயின் மொழியே...
காணொலிக்கு பின்னால் கதை பேசும் மொழியே...
மண்ணின் வாசனை மாறாததுபோல், உன் பற்று மாறப்போவதில்லை என்றும்!!!

தொலைந்து போன நேரத்தில் தாயின் குரல் ஒலிபதை போல...
சூரியகாந்தி பூ பொல் திறக்கும் உன் ஒலி...
அழகு வெறும் உருவம் என நினைப்பதை உடைத்து, சொற்களால் நிரப்பினாய்...

தமிழ் பேசுவது மட்டுமல்ல, தமிழ் நாட்டில் வாழ்வதே பெருமை தான்...
என் கவிதைகளின் முதல் சிந்தனையே...
உன் மீது நான் வைத்திருக்கும் பற்று ஒரு போதும் மாறாது...
தமிழே வாழ்க! வாழ்க!
« Last Edit: April 07, 2025, 08:18:32 PM by Lakshya »

Offline அனோத்

என் தாய் மொழியெனத் தமிழ் எழுந்ததே ..........!
தாலாட்டின் மென்மையதில்  இசைந்ததே..........!
அழகிய அகரம் இதனில் தொடக்கமாம்..........
ஆரமுதென வார்த்தை ஒலிக்குமாம்.........

ஈரடிக் குரலதன் திரு மந்திரமாம் !
ஆயிர வார்த்தைகள்  கொண்ட
ஆதி மொழியதாம்......

செந்தமிழ் பாடும் செல்வமிது
என் சிந்தனை யாவும் கலந்தது.....

சங்கம் எழுதிய சான்றுரையே....!
தமிழனின் பாரம்பரியத் தேனுரையே.....!
வள்ளுவர் வழிதான் நம்மோசை.....
வார்த்தைகள் வீசும் இன் - தேன்மதுர பாஷை......

பாட்டு வரும் போது பூக்கள் சிரிக்கும்......
என் பாரதி வரிகளில்  பறவைகள் பறக்கும்....
உலகம் வியக்கும் தலைமுறையில்......
திலகம் அணியுமென்  தமிழ் மொழியில்.......

"அறம் செய விரும்பு" என்ற அருள் மொழியோடு,
அகம் நிறை துவக்கம் கொடுப்பதிங்கு   
தாய்த் தமிழ் நாடு ........

ஏழாம் பிறவியிலும்,   என் எழுத்தாய் நீ இருப்பாய்......!
ஈரிழை நரம்பிலும் என் இசையாகவே தினம் நீ ஒலிப்பாய்......!

காதலிக்கும் பாவலனாய் நான் உனக்கே அடிமை,
கரைந்துபோன சுவையாக நீயே என் கவிதை.....!
கலையெனும் காற்றில் கரைந்த மொழி,
கவிஞர்களின் கையில் பிறந்த உளி............

உன் எழுத்துகள், எழில் பூத்த புறாக்கள் போல பறக்கும்....!
உன் உரைநடை, நெஞ்சமெனும் வாசலில் கதவு திறக்கும்.....!

சந்தியில் உரைக்கும் பாட்டும்,
சங்கம் இழைத்த நடையும்,
சதங்கைகளைத் தாண்டி போகும்
சீரிய சொற்களின் படையும் .......!

பாரிய காதல் கொண்டு
உனை படைத்தவன் யாரோ ?

முத்தமிழ் வாழும் என் மூச்சிலே,
மொழிகளுள் மூத்த என் பேச்சிலே......!
நாவளர் வாழ்த்திய நாவெனது,
தமிழின்றி நாளில்லாக்  காதலது......!

பாரதி வார்த்தையில் தீக்கொளும் கனல்......
பெரியாரின் பேச்சில் சிந்தனையின் சுழல்.......
மொழி அல்ல இது !
         என் உள்ளத்தின் உணர்வு......!

மண்ணில் பிறந்த மொழிகள் பலவாகும்,
ஆனால் வானத்தில் மிளிர்வது என் தமிழாகும்.........

உயிருடன் கூடிய ஓர் உயிர்மொழி
என் உணர்வுடன் கலந்திட்ட தமிழ் மொழி....!
உதிரம் என் உடம்பில் சொரிந்தாலும்
உரத்த தமிழ் இசை வெள்ளம் உலகில் பரவி,

முத்தமிழ் காதல் கொண்ட என் காதலும்
மண்ணில் கரையும் நாள் வரை,

என்னில் தமிழ் ஒலிக்கும்...!
எண் திசையாய் அது நிலைக்கும்.....!

முத்தமிழ் காதலன்  -அனோத்-
« Last Edit: April 08, 2025, 12:36:31 AM by அனோத் »

Offline SweeTie

உமிழ்வாய்  தமிழை
தெளிவாய்   
சிறப்புடை  ழகரம்
தனை அதை மறவாய்

அமிழ்தாய்  இனிதாய் 
பேசும் மொழியை 
இழிவாய்   மதிக்கும் 
மாந்தரும்   உளரே   

குமரியில்  பிறந்து
மதுரையில்  வளர்ந்து
அகிலம்  பரந்து 
நறுமணம் வீசும்  தமிழே

பருவத்தில்  குமரி நீ
பழக்கத்தில்  குழந்தை நீ
காலத்தில்  வசந்தம் நீ
கர்வத்தில்   ஜோதி நீ

பாவலன் நாவில்  புரள்வாய்
பண்டிதன் விரல்களில்  தவழ்வாய்
நடிகனின்  உடலிலே  நெளிவாய்
எத்தனை  திமிரடி  உனக்கு

அறுபடை வீட்டிலே  ஆண்டியாய்
நின்ற அப்பனை பாடிய தமிழே
அறுபது நான்கு  நாயன்மார்  நாவில்
அழகுற   பாடிய தமிழே 

முப்பத்து முக்கோடி  தேவர்கள்
மனமுருகி  கேட்ட  தமிழே 
எத்தனை தசாப்தங்கள் கடந்தாலும்
என்றென்றும்  உயிர்வாழ்வாய்
என் இனிய தமிழே!!!! 
 

Online Yazhini

அழகானவள் இனிமையானவள்
மென்மையானவள் என்ற
வட்டத்தினுள் அடங்காதவள்.

வீரம் நிறைந்தவள்
கர்வம் செழித்தவள்
திமிர் பிடித்தவள்.

கோழைக்கும் வீரம் ஊட்டுபவள்
பாறைக்கும் அறிவு நல்குபவள்
மரத்திற்கும் மறத்தைப் பழக்குபவள்

வீரம் அன்பு கண்ணியம்
அறிவு அறநெறி கற்பிக்கும்
எங்கள் ஆசான் இவள்

அமைதியையும் போதித்து
ரௌத்திரமும் பழகு என்று
பழக்கும் தோழி இவள்.

கருத்துகளால் மட்டுமல்ல
உணர்வுகளாலும் நம்மை
இணைக்கும் அன்னை இவள்

ஆதிகாலம் தொட்டு
இன்றுவரை தன்னை
புதுப்பித்துக் கொண்டே இருப்பவள்.

இனி மெல்ல சாவது தமிழல்ல
ஆள்வது தமிழ் என
பரணி எங்கும் மேவி கிடப்பவள்

உலகமெங்கும் சென்று திரவியம் தேடு
என்று வழி நடத்துபவள்
யாருக்கும் அடங்காதவள்.

பாற்கடலின் முத்தாக,
 பாரினில் அமிழ்தாக
நாவிற்கு தீஞ்சுவையாக,
 மனத்திற்கு உரமாக.


செந்தமிழே! பைந்தமிழே! முத்தமிழே!
என் அன்னை தமிழே!
இம்மையில் என்னை ஆள்கின்றவளே
மறுமையிலும் என்னை ஆட்கொள்ள வேண்டுமம்மா...
« Last Edit: April 10, 2025, 03:21:43 PM by Yazhini »