Author Topic: மனிதன் – ஒரு முகமூடி கலைஞன் !  (Read 455 times)

Offline சாக்ரடீஸ்



Photo courtesy : Meta AI


மனிதன் – ஒரு முகமூடி கலைஞன்

சமூகத்தின் மேடையில்
மனிதன் பல முகங்கள் அணிகிறான்.
ஒவ்வொன்றும்,
பார்வைக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால்,
அவை அனைத்தும் யதார்த்தமல்ல.
உண்மை முகம் ஒன்று தான்
அவர் நெருக்கமானவர்களிடம் மட்டும் காணப்படும்.

அது வெறும் முகம் அல்ல,
அது அவரது அகம்.
மௌனமாக பேசும் அந்த முகம்தான்
மனிதனின் உண்மையான அடையாளம்.
« Last Edit: April 12, 2025, 11:54:40 PM by சாக்ரடீஸ் »