Author Topic: தஞ்சாவூர் பொம்மை !  (Read 118 times)

Offline சாக்ரடீஸ்

தஞ்சாவூர் பொம்மை !
« on: April 15, 2025, 09:36:42 PM »



நீ பேசும் வார்த்தைகள்
எனக்குப் புரியவில்லை,
அந்த சிரிப்பு மட்டும் போதும்,
என் மனம் மாறிவிடுகிறது.

என் கண்கள்
உன்னைப் பார்ப்பது இல்லை,
ஆனால்
என் உள்ளம்
உன்னைத் தேடுகிறது.
நீ என்னை பாதித்துவிட்டாய்,
தஞ்சாவூர் பொம்மையாய் மாற்றிவிட்டாய்.

நீ அசைய,
நான் அசைகிறேன்,
நீ சிரிக்க,
நான் சிரிக்கிறேன்.

என்னவென்று நான் சொல்வேன்?
உன் மௌனம் கூட
என் மொழி,
நீயின்றி நான் இல்லை.

- சாக்கி