Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 364  (Read 4456 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 364

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Ramesh GR

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
என்றோ காணும் என் நண்பனின் முகம் ஞாபகப்படுத்தும் என் வாழ்நாளின் வசந்த காலத்தை

புது புத்தக பை உடன் ஆசையாய் சென்றது முதல் நாள் பள்ளிக்கு மட்டும் தான்

அன்று தொடங்கி நான் பள்ளி காலம் முடிக்கும் வரை தினமும் காலை ஒரு சோகத்தோடே சென்ற பள்ளி

அன்னை போலவே அன்பு காட்டி தந்தை போல வாழ்க்கையின் முதல் படியில் கால் வைக்க செய்த எனது ஊர் ஒட்டு கட்டிடம் இன்னும் கம்பிரமாக சொல்லும் என் மடியில் தான் முதன் முதலில் நீ தவழ்ந்துதாய் என்று

பென்சிலுக்கு சண்டை போட்ட என் நண்பன்

அவனை சமாதானம் படுத்த நான் கொடுத்த அழகிய லப்பர்


எவ்வளவோ விளையாட்டு இருந்தாலும் மரத்து அடியில் பாடம் நடத்தும் போது மண்ணில் விளையாடும் சுகம் வேறு எந்த விளையாட்டிலும் கிடைக்காது

இவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலும் பரீட்சை அப்போ கிடைக்கும் அடி இப்பொது நினைத்தாலும் சிரிக்க தோன்றும்

வாசனையை வைத்தே யார் என்ன சாப்பாடு என்று கணித்து திருடி சாப்பிடும் சுகம் 5 ஸ்டார் விடுதியில் கூட கிடைக்காது

அன்பும் கனிவும் கொண்ட தமிழ் ஐயா

என்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க போராடிய ஆங்கில ஆசிரியை

எப்போதும் என்னை பாரட்டும் கணித ஆசிரியர்

அடித்தல் கூட வலிக்காமல் அடிக்கும் எங்கள் அறிவியல் ஆசிரியர்

சிறு தவறு என்றாலும் தூக்கி போட்டு மிதிக்கும் சமூக அறிவியல் ஆசிரியர்

எப்போதாவது நாங்கள் செல்லும் PT வகுப்பு ஆனாலும் அதிலும் விளையாடியாது இல்லை


இவை அனைத்தும் அழகிய நினைவுகளாக மட்டுமே இருக்கிறது ஒரு ஒரு நிகழ்வும் நினைக்க நினைக்க இனிக்கும் நினைவலைகள்

இன்று கடந்து சென்றால் கூட கண்கள் என் வகுப்பை தேடும் முகத்தில் புன்னகை பூக்கும்

அது என் பள்ளி அன்று அல்ல என்றும் அது என் பள்ளி


« Last Edit: January 28, 2025, 08:08:11 AM by Ramesh GR »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 266
  • Total likes: 1044
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
சிறகுகளின்றி பறந்த காலமது!
எச்சில் பண்டம் இனித்தது.
சிந்தும் பேனாமைத் துளி உதவியது.

நித்தம் எழுகையில் போராட்டம்.
வகுப்பறை எங்கும் ஆர்பாட்டம்.
தேர்வு என்றால் திண்டாட்டம் விடுமுறை என்றால் கொண்டாட்டம்..

நண்பர்களின் கைக்கோர்த்து சுற்றிதிரிந்தோம்.
காண்பவை அனைத்தையும் ஆராய்ந்தோம்.
சின்னஞ்சிறு விஷயத்திற்கும் பூரிப்படைந்தோம்.

கள்ள கபடமற்ற குழந்தைமனது.
விழுப்புண் அனைத்தும் விருது.
பொறாமையற்ற நண்பர்கள்.
நம் வாழ்வின் நட்சத்திரங்கள்.

பெற்றோரின் அடி ஆசானின் அடி
என அடிகளால் செதுக்கப்பட்டோம்.

அரும்புமீசை முதல்பரு என
நாணம் துளிர்த்த காலமும் அதுவே!
நேர்பார்வை ஓரப்பார்வை ஆனதும்
புன்னகையில் நாணமேறியதும் அங்கேதான்...

இதயத்துடிப்பு காதுகளில் கேட்டதும்
தென்றல் இன்னிசையானதும் அங்கேதான்

வீண்சண்டை வீண்பேச்சு என
எல்லாம் இன்று பொக்கிஷங்கள்.

மெருகேற்றப்பட்ட அறிவும் பயமறியா
பட்டறிவும் வாழ்வின் அச்சாணி...

உலகமே எனது என்றெண்ணிய
என் வசந்த காலமே!
மீண்டும் ஒருமுறை வருவாயா!!!
« Last Edit: February 07, 2025, 03:17:57 AM by Yazhini »

Offline Asthika

  • Sr. Member
  • *
  • Posts: 260
  • Total likes: 609
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத நினைவுகள்
 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மனதில்
 மகிழ்ச்சியான கனவாய்
 பூத்துக்குலுங்கும் தோட்டமாமாய்
வாழ்க்கைப் பாடங்களை
கற்றுத்தரும் அரங்கமாய்
 என்றும் நீங்காத நினைவுகளாய்
 உலாவி கொண்டிருக்கின்றன..

  தாய் பத்து மாதம் சுமந்து
 இவ்வுலகிற்கு கொண்டுவந்தாலும்
  பன்னிரண்டு ஆண்டுகள் நம்மை
 சுமந்து இவ்வுலகிற்கு..
  பொக்கிஷமாய் அறிமுகப்படுத்துகிறது..
 
 ‌‌ பள்ளி முடிந்தது "மனதில்
பட்டாம்பூச்சி எழும் தருணம்
இவ்வார்த்தை கேட்கும்போது அரைக்கை
சட்டையும் டவுசரும் அணிந்து
சேட்டை செய்யும் வயதில் !
 [புத்தகத்தில் உயிரியல் கற்றோம்
வேதியல் கற்றோம் இயற்பியல்
கற்றோம் கணிதம் கற்றோம்
தோழமையில் மனிதம் கற்றோம்
  கருவறையில் மென்மையாக உருவாகி
வகுப்பறையில் பலம் அடைந்தோம்!
 
  ஈர்ப்பும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை
கனவுகள் ஆயிரம் இருந்தும் வழி நடத்த யாரும் இல்லை
கடமைக்கு கல்லூரி
கற்றுவாங்க வகுப்பறை
சோர்வில் தேற்றிவிட தோழி
துன்பத்தை காற்றில் விட தோழன்
ஆண்டுகள் ஓடினாலும்
அடுத்த நொடி பற்றி கவலை இல்லை
வேலைக்கு சென்றாலும்
வியர்வை இன்றி உழைத்தாலும்
கல்லூரி மரத்தடி
நிழல் தரும் சுகம்
வேறெங்கும் கிடைக்காது...

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 416
  • Total likes: 1931
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum

முதல் நாள் அனுபவம்
மனசுல நெனப்பில்ல
கடைசி நாள் நினைவுகள் - இன்றும்
மனச விட்டு நீங்குது இல்லை

ஏண்டா இங்க வந்தோம்னு
முதல் நாளன்று அழுதுருப்போம்
ஏண்டா முடிஞ்சு போச்சுனு
நாள்தோறும் அழுதுட்டு இருக்கோம்..

தாயின் கருவறை போல் - யாரும்
திரும்பி செல்ல விரும்பும் இடம்
கள்ளங்கபடம் இல்லாமல் என்றும்
நட்பை மட்டுமே வளர்த்த இடம்...

அதட்டி அடித்து கண்டித்தாலும்
அன்பில் தாயை மிஞ்சும் ஆசிரியர்கள்...
கல்வியுடன் கலைகள் பல கற்று
வாழ்வில் உயர உதவிய ஆசான்கள்...

ஜாதி மத பேதமின்றி பல
கடவுள் வாழ்த்து பாடினோம்
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி
அரட்டை அடித்து ஆர்ப்பரித்தோம்..

ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி
எல்லாரும் சமமென கூடி நின்றோம் ...
அன்பை மட்டுமே அடித்தலமாய் கொண்டு
அனைவரின் மனதிலும் நிலைத்து நின்றோம்...

அடுத்தவர் உணவையும் பகிர்ந்துண்டோம்
அவர்தம் பொருளையும் பகிர்ந்து கொண்டோம்
அடிதடி வந்தாலும் அடுத்த கணமே
அன்பால் அனைவரையும் அரவணைத்தோம் ...

போட்டியைக்கூட புன்சிரிப்புடன் ஏற்று
அடுத்தவர் வெற்றியை கைதட்டி கொண்டாடி
படிப்புடன் சேர்ந்து பண்பையும் வளர்த
இப்பருவம் போல் வேறொன்றும் காணோம்...

மீண்டும் ஒருமுறையேனும்
உடுத்த நினைக்கும் சீருடை
செல்ல நினைக்கும் வகுப்பறை
கேட்க நினைக்கும் அதட்டல்கள்
ஏற்க ஏங்கும் தண்டனைகள் என

நீங்கா நினைவுகளாய் என்றும்
 நிலையாய் நிறைந்திருக்கும்
இந்த பள்ளிப்பருவம் போலொறு பொக்கிஷமும் இல்லை
அந்த வாழ்வுக்கு மிஞ்சிய வரமும் வேறில்லை..........


« Last Edit: February 09, 2025, 02:01:56 AM by VenMaThI »

Offline Sankari

Thank you SockY for the corrections !  :D :D

படித்த நாட்களில்
எத்தனை நினைவுகள்

முதன்முதலில்
அம்மா விட்டு செல்லும்போது
அச்சம் கொண்டது  நினைவிருக்கு

முதன்முதலில் கிடைத்த
சினேகிதன் நினைவிருக்கு

முதன்முதலில் எதிர்த்த
எதிரியும் நினைவிருக்கு

துள்ளி ஓடி
விளையாடியது நினைவிருக்கு

தனிமையில் தவித்து
ஏங்கியது நினைவிருக்கு

முதன்முதலில்
அணைத்துக் கொண்டதும் நினைவிருக்கு

முதன்முதலில்
சண்டை போட்டதும் நினைவிருக்கு

முதன்முதலில்
முத்தமிட்டது நினைவிருக்கு

முதன்முதலில்
கண்ணீர் சிந்தியதும் நினைவிருக்கு

முதன்முதலில் நம்பிக்கை வைத்ததும்
நினைவிருக்கு

முதன்முதலில் நடந்த துரோகமும் நினைவிருக்கு

படிப்பில் முழு கவனம்
செலுத்தி கடினமாக
படித்ததும் நினைவிருக்கு
அப்பொழுது பெற்றோர்கள்
ஆனந்தம் அடைந்ததும் நினைவிருக்கு

வயதுக்கு ஏத்த சேட்டை
செய்ததும் நினைவிருக்கு
அப்பொழுது பெற்றோர்கள்
திட்டியதும் நினைவிருக்கு

அதிகமாய் பாசம் ஊட்டிய
ஆசிரியர்களும் நினைவிருக்கு
மனதை துன்புறுத்திய
ஆசிரியர்களும் நினைவிருக்கு


எத்தனை எத்தனை நினைவுகள்
ஆனந்தம் அன்பு பாசம் மகிழ்ச்சி பெருமை வெறுமை துன்பம் சோகம் வெறுப்பு மற்றும் தனிமை இவை அனைத்தும்
நான் கற்றுக் கொண்டது படித்த ஆண்டுகளில்தான்

அது ஒரு கனாக்காலம்
« Last Edit: February 18, 2025, 09:35:32 PM by Sankari »
banniere" border="0

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1831
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
யாரும் பறித்து கொள்ளமுடியாத பொக்கிஷம் கல்வி... அத்தகைய வரத்தை கொடுத்த எமது பள்ளிக்கு மிக்க நன்றி...

பள்ளி நாட்களில் பல நினைவுகள்,
கண்களில் பல கனவுகள்
புத்தகம் சுமக்க கஷ்டப்படும் நமக்கு அப்பொழுது தெரிவதில்லை, இக்கல்வியே நம்மை வாழ்கை முழுதும் சுமந்து செல்லும் என்று....

கடைசி இருக்கைகள் கிடைப்பதே வரம்...அதில் அமர்ந்து நண்பர்களுடன் சிரித்து, விளையாடிய நாட்களை மறக்கமுடியுமா???
அழகான சிரிப்பு கலந்த கதைகள் பாடத்தின் போது... ஆசிரியர் கோவமடைய,சின்ன சின்ன தண்டனைகளும் சுவாரசியம் தானே?

குற்றம் இல்லாத குறும்புகள்,கற்றதை விட வாழ்க்கைக்கான பாடங்கள்,வகுப்பறையில் தூக்கம்,கிழிந்த புத்தகங்கள், இருக்கையில் கிறுக்கல்கள்,, என்று பல பக்கங்களை கொண்ட புத்தகமே பள்ளி நாட்கள்....
நண்பர்களோடு கை பிடித்து கதை பேசி பள்ளி சென்ற நாட்களை எண்ணி மனம் ஏங்குகிறது...

கல்லூரி சென்ற பின்னும்..காற்றில் இசைக்கும் சிரிப்பு சத்தம்...பிடிக்காத கணக்கு பாடம், எண்ணற்ற வீட்டுப்பாடம் இதையெல்லாம் எழுதி தருவதற்கு ஒரு அறிவாளி வகுப்புத் தோழி...மழை நாட்களில் கண்ணாடி ஜன்னல் அருகே அமர்ந்து , மழை துளிகளுடன், ஆசிரியர் கூறும் கதைகள்...நாம் படிப்பதை விட, பரிட்சைக்கு முன் - நண்பன் ஐந்து நிமிடங்களில் சொல்லி தரும் பாடமே நம்மளை பாஸ் ஆக்கி விடும்...
பள்ளி நாட்கள், விலை குடுத்தாலும் அதற்கு ஈடு இணையற்ற பொருள் ஒன்றும் இல்லை...

❤️வேலைக்கு சென்றாலும் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் பள்ளி நாட்கள்❤️
« Last Edit: February 18, 2025, 11:21:58 PM by Lakshya »

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Total likes: 1019
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
தாய் அன்பினை தவிர வேறு ஒன்றும்
அறிய
பாலக பருவத்தில் கள்ள கபடம் அறியாத வயதில் கல்வி கற்க சென்றது பள்ளிகூடமென பூந்தோட்டம்

இப்பூந்தேட்டத்தில் பட்டாம்பூச்சியாய் ஒற்ற வயது உடன் துள்ளி திரிந்து விளையாடி மகிழ்ந்தோம்

மனசுமைகள் இல்லாத வயதில்
பள்ளி பாட புத்தக சுமைகளை சுமந்து சென்றோம்

எண்ணிய எண்ணத்தில் ஏற்ற தாழ்வு மனப்பான்மை இல்லாமல் கூடி உண்டு உணவை பரிமாறி மதிய உணவை உண்டு மகிழ்ந்தோம்

சக மாணவர்கள் உடன் சில்லறை நாணயத்தை ஒன்றாய் சேர்த்து பள்ளி வளாகத்தில் ஆசை ஆசையாய் வாங்கி சாப்பிட ஆசை மிட்டாய் பாசத்துடன் பகிர்ந்து உண்டது மறக்க முடியாத பள்ளி கூட நினைவுகள்

மாலையில் சக தோழர்கள் உடன் வெள்ளை சிருடை வண்ணம் மாற மணல் கறையுடன் கூடி விளையாடி பொழுது போக்கினோம்

கல்வி விலை போகாத காலத்தில்
கல்வி கட்டணம் இன்றி நல்லதோர்
கல்வி பயின்றோம்

பாலக பருவத்தில் பயில ஆரம்பித்த
கல்வி செல்வம் விடலை வயதில் முடித்த பள்ளி பருவ பசுமையான நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும் பள்ளி கூட நினைவுகள்

கவலை என்றால் என்ன வென்று தெரியாத பள்ளி பருவ அழகான நாட்கள் அழியாத நினைவுகள்
அவை அள்ளி தந்த ஞாபங்களோ
இன்று வரை நாம் நினைவோடு

 

Offline MugilaN

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 11
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
என் மொட்டை மாடி முழு நிலவே
உன்னை கைகளில் ஏந்திட அலைக்கின்றேன்
இருளைப் போக்கிடும் வெண்ணிலவே
உன் வெளிச்சத்தை பருகிட தவிக்கிறேன்
உன்னை தேடி திரியும் சில நாளில்
 விழிகளில் வந்து விழுந்திடுவாய்
என் இதயச் சிறையில் ஒளிர்ந்திடுவாய்

Offline KS Saravanan

பள்ளி பருவ காலங்கள்
என்றும் வாழ்வில் வசந்தமே
புதிதாய் பள்ளியில் சேர்ந்ததுமே..
புதிய உலகம் பிறந்தனவே
முதல் நாள் நடுக்கம் இருந்தாலும்
நண்பர்களுடன் இன்பம் மலர்ந்ததே..!

வானவில் பார்த்து மகிழ்ந்தோமே
மழையில் குளிக்க சென்றோமே
காகிதம் ஓடம் செய்தோமே
நீரோடையில் அதை விட்டோமே
தலைமை ஆசிரியர் வந்தேலோ
பிடிபடாமல் ஓடி மறைவோமே
படிப்பது போலவே நடிப்போமே..!

சின்ன சின்ன சண்டைகள்
மீண்டும் மீண்டும் போட்டோமே
அடுத்த நொடி அதை மறந்து
தோளில் கைகளை போட்டோமே
போட்டிகளில் கலந்தோமே
பரிசுகளை வென்றோமே
மகிழ்ச்சியில் துள்ளி குதித்தோமே..!

காலை மணியோசை கேட்டாலே
வகுப்பறை தினம் சென்றோமே 
மதிய உணவு இடைவெளியில்
உணவை பகிர்ந்து அளித்தோமே
பலவகை உணவை சாப்பிட்டு
வகுப்பில் தூங்கி விழுந்தோமே..!

Free ah Bus paas வாங்கிட்டு
தினமும் பஸ்ஸில் சென்றோமே
Bus breakdown ஆனாலும்
நடையாய் நடந்து போவோமே 
கதைகள் நெறய பேசியே
வீதியெங்கும் சிரிப்பொலி தான்

விடுமுறை வந்தால் உற்சாகம்
ஆனால் மனமோ பள்ளியில் தங்கிடுமே
மீண்டும் பள்ளி திறக்கும் வரை
உறவினர்கள் வீட்டிற்கு சென்றோமே 

காலம் கடந்து சென்றாலும்
நினைவுகள் என்றும் நிலைக்குதே
பள்ளி நாட்கள் மறக்காமல்
வாழ்வில் என்றும் இருக்குமே
கண்ணீர் துளிகள் வந்தாலும்
இதழோரம் புன்னகை மலர்ந்திடுமே..!