Author Topic: மரணமே !  (Read 941 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Total likes: 4111
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மரணமே !
« on: December 12, 2024, 08:06:55 PM »
மரணமே

உன்னில் நான்
வந்தடைந்தற்கு
ஒரு கதை இருக்கிறது
ஒரு காரணமும்

என் எண்ணங்கள்
தேடி கொண்டிருந்தது
எதையோ

என்
எண்ணத்தில்
கட்டுக்கடங்காத
ஆசைகள்
இருந்தது

என் பயணம்
காரணங்கள்
கொண்டிருந்தன
என் பயணம்
என் வார்த்தைகளாக
என் வழிகாட்டியாக
என்னையறியாமல்
என்னை
நடத்திக்கொண்டிருந்தன

பயணத்தின் முடிவில்
கால்கள்
ஓய்வுகொள்ள
ஆசை கொள்ளும்

அச்சமயம்
கண்கள்
வானத்தையும்
பின்பு
நட்சத்திரங்களையும்
தேடும்
கண்டதும் கண்கள்
மகிழ்ச்சி கொள்ளும்

வார்த்தைகளால்
அழைக்காமல்
உங்கள் மற்றொரு
பயணத்தின் தொடக்க
புள்ளியாய் மாறும்
அத்தருணம்

அதுவே
மரணத்தை நோக்கி
நகர்த்தி செல்லும்


****JOKER****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "