Author Topic: அவன் பயணம் !  (Read 1092 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1258
  • Total likes: 4310
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அவன் பயணம் !
« on: December 04, 2024, 07:20:50 PM »


வழியோரம்
அத்தனை
புன்னகைகளை கடந்து
அவன் உள்ளே நுழைகிறான்

நொடி பொழுதில்
எத்தனை
சந்தோஷங்களை
உருவாக்கிவிடுகிறது
அவன் வரவு

அடுக்கடுக்காக
அடுக்கிவைத்த
பொருட்கள்
போல மகிழ்ச்சிகள்
நிறைந்துகிடக்கிறது
அவன் வீடு முழுவதும்

வாசலில் அவனை காண
காத்திருபோரின்
புன்னகைகளையும்
நாணங்களையும்
அவன் கடக்கிறான்

தாயின்
பாசமான
முத்தம்
மனைவியின்
அன்பான
முத்தம் பெற்று
குழந்தைகளோ   
அன்பின் முத்தங்களை
வாரி கொடுக்கிறார்கள்
பரிமாறிக்கொள்கிறார்கள்
பரஸ்பரம்

அங்கு
அன்று
அவ்வீட்டில்
திருவிழாவின் உணர்வு

உடன் கொண்டு வந்த
பெட்டியின் பாரமும்
சட்டைப்பையின் பாரமும்
மெல்ல மெல்ல குறைந்துகொண்டிருந்தது

வாங்கி வந்த
பொருட்கள் எல்லாம்
குழந்தைகளிடமும் உறவுகளிடமும்
நண்பர்களிடமும்
மகிழ்ச்சியை விதைத்தது

நாட்கள் செல்ல செல்ல
விருந்து முடிந்து
சில பெருமூச்சுகளை
சுமந்துகொண்டு
திரும்ப எத்தனிக்கிறான்

போகாதே என்று
சொல்லாமல் சொல்லி
பின்னோக்கி இழுக்கும்
விழிகளை பார்த்துக்கொண்டே
அவன்
புன்னகையை உதடுகளில்
வரவைத்து
நடக்கிறான்
முன்னோக்கி

ஒவ்வொரு முறையும்
வழி அனுப்ப
வந்து நிற்கும்
குடும்பத்தினரின்
கண்கள் பார்க்கையில்
ஏனோ மனதில் பாரத்தை
கடத்தி விடுகிறது

நிறுத்த முடியாது என்று தெரிந்தும்
ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில்
ஊரை பிரிந்து
உறவுகளை பிரிந்து
இன்னும் தொடர்கிறது
அவன் பயணம்




***JOKER****

pic courtesy : Meta AI

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1908
  • Total likes: 5956
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: அவன் பயணம் !
« Reply #1 on: December 04, 2024, 11:47:24 PM »
போகாதே என்று
சொல்லாமல் சொல்லி
பின்னோக்கி இழுக்கும்
விழிகளை பார்த்துக்கொண்டே
அவன்
புன்னகையை உதடுகளில்
வரவைத்து
நடக்கிறான்
முன்னோக்கி

இந்த வரிகள் செம 🥳🥳🥳

பிரியாணி மச்சி வெல்கம் பேக் ❤️