Author Topic: இசை தென்றல் - 291  (Read 6433 times)

Offline Kavii

  • Jr. Member
  • *
  • Posts: 51
  • Total likes: 274
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 291
« Reply #15 on: October 18, 2024, 08:53:38 PM »
yes
முகவரி (Mugavaree) என்பது 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று வி. இசட். துரை இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி காதல் திரைப்படம் ஆகும்.[2] இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.[3]

இந்த திரைப்படம் 19 பிப்ரவரி 2000 இல் வெளியிடப்பட்டது,[4] மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது,[5] சிறந்த குடும்பத் திரைப்படம் மற்றும் பிருந்தா, சிறந்த நடன இயக்குனருக்கான இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளை வென்றது.

இப்படத்தில் ஸ்ரீதர் (அஜித் குமார்) ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக ஆவதற்கான முயற்சியில் கடக்கும் லட்சியம், காதல் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் முரண்பட்ட உணர்ச்சிகளைச் சுற்றியே கதை சுழல்கிறது. ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள் அமைந்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா ஆவார்.

1.   "ஏ! கீச்சு கிளியே"     ஹரிஹரன்   
2.   "ஏ நிலவே நிலவே"     உன்னிமேனன்   
3.   "ஓ நெஞ்சே"     ஹரிஹரன், சுவர்ணலதா   
4.   "ஆண்டே நூற்றாண்டே"     நவீன்   
5.   "பூ விரிஞ்சாச்சு"                 உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்

இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஏ ! ஏ ! கீச்சி கிளியே !



இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஏ ! ஏ ! கீச்சி கிளியே ! இந்த பாடலின் வரிகள் அனைத்தும் அருமை!

உயிர்களின் சுவாசம் காற்று
அந்த காற்றின் சுவாசம் கானம் உலகே இசையே …
எந்திர வாழ்கையின் இடையே
நெஞ்சில் ஈரத்தை புசிவது இசையே எல்லாம் இசையே …

காதல் வந்தால் அட அங்கும் இசை தான்
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான்

தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்

இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம் இசையாவோம்…..

« Last Edit: October 18, 2024, 09:08:40 PM by Kavii »