Author Topic: சாஸ்திரம் கூறும் சில கடைபிடிக்க வேண்டிய நல்ல அறிவுரைகள்..  (Read 1724 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226315
  • Total likes: 28785
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


சாஸ்திரம் கூறும் சில கடைபிடிக்க வேண்டிய நல்ல அறிவுரைகள்..

1. குளிக்கும்போது நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும்.

2. தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது.

3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது.

4. கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது.

5. சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது.

6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது.

7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ, கையையோ நக்கக்கூடாது.

8. இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிட வேண்டும்.

9. வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம்
துப்பக்கூடாது.

10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது.

11. தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது.

12. ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூ பூஜைக்கு ஆகாது.

13. கடும்வெயில், மயானப்புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவுகொள்ளுதல் தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்.

14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.