Hi dear RJ & DJ
இந்த வாரத்திற்கு ஆன இசைத்தென்றலுக்கு நான் தேர்வு செய்த திரைப்படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே.
இப்படம் மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் மோகன், சுஹாசினி, சரத்பாபு, பிரதாப் போத்தன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோகர், குமரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
காதலை மையமாகக் கொண்ட இப்படத்தில் சுஹாசினி அறிமுக நாயகியாகவும் ,மோகன் முதல் பெரிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் 1981 இல் 28வது தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் தலா மூன்று விருதுகளை வென்றது. இது தெலுங்கில் மௌன கீதம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது .
இப்படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன.
பாடல் பாடல் வரிகள் பாடியவர் பாடியவர்
1. ஹே தென்றலே கங்கை அமரன் பி.சுசீலா
2. பருவமே புதிய பாடல். பஞ்சு அருணாசலம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் & எஸ். ஜானகி
3. உறவெனும் கங்கை அமரன் எஸ். ஜானகி
4. மம்மி பேரு கங்கை அமரன் எஸ்.ஜானகி & வெண்ணிற ஆடை மூர்த்தி
எனக்கு பிடித்த பாடல்
பருவமே புதிய பாடல். S.P.B &. S.janki பாடிய பாடல்