Author Topic: எது சுதந்திரம்?  (Read 1175 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
எது சுதந்திரம்?
« on: August 15, 2024, 06:21:11 PM »
தந்திரமாய் சில நரிகள்

வந்திறங்கி நம்மையுமே

எந்திரம் போல் ஆட்சி செய்ய

​கந்தலாகி போய் கிடந்தோம்



​அன்று நம் எதிர்காலம்

​ஆபத்தாகி விடுமெனவே

​சிங்கமென சிலரினைந்து

​பங்கமென போர் செய்தர்



​நரிக்கூட்டம் விரட்டிடவே

​பரிபோல பாய்ந்த வர்கள்

​மரித்தே வீழ்ந்தாலும்

​மானத்துடன் போரிட்டர்



​ஒற்றுமையாய் யாவருமே

​நிற்பதையோ தாங்காமல்

​வெள்ளையனும் விடுதலையை

​இங்கே விட்டுவிட்டு சென்றுவிட்டான்



​சுதந்திரம் கிடைத்ததென

​சுற்றுகிற நாமுமிங்கே

சுகபோக வாழ்வினிலே

சிலவற்றை மறந்துவிட்டோம்



எத்தனை துயரங்கள்

எத்தனை இழப்புகள்

எல்லாம் சேர்ந்தேதான்

வந்ததிந்த சுதந்திரமே



என்பதையே மறந்துவிட்டு

இன்பத்தில் திளைக்கின்றோம்

எல்லா நாட்களையும்

இயல்பாக கடக்கின்றோம்



காந்தி சொன்னதுபோல்

பெண் ஒருத்தி நள்ளிரவில்

தனிமை நடை போட

தகுந்த நாள் வந்துவிட்டால்



அதுவே நமக்குமிங்கே

அழகான சுதந்திரமே

என்பதை நாம் உணர்ந்து

எந்நாளும் பாடுபட்டு



நாட்டை நல்வழியில்

நாமெல்லாம் ஒன்றாக

கொண்டு சென்றிடவே

இந்நாளில் உறுதி ஏற்போம்🙏🙏


(இந்த சுதந்திர தினத்தில் நம்.நாட்டை நல்வழியில் கொண்டு நாமெல்லாம் உறுதி ஏற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்   உங்கள் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean