Author Topic: பிறவிப்பலன்  (Read 1333 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
பிறவிப்பலன்
« on: August 10, 2024, 03:42:34 PM »
கதை எழுத எந்தன் கைகள்
துடித்ததால் இங்கு வந்தேன்
எதை எழுத என்ற எண்ணம்
துளிர்த்ததால் சற்று நின்றேன்
விதை எனவே கொஞ்சமாக
எழுதிடத்தான் நெஞ்சம் ஏங்க
அதை இதை என எல்லாம்
பிழை இன்றி எழுதலானேன்

எந்தன் எழுத்தைத்தான்
படித்த ஒரு சிலரோ
தங்கள் ரசனையை நான்
ஈர்த்து விட்டேனே
என்றே சொல்லி அவர்
அன்பை தரும்பொழுதே
ஏன் நான் பிறந்தேனோ
என்றே அறிந்து விட்டேன்
intha post sutathu ila en manasai thottathu..... bean