எத்தனை
குழந்தைகள் இருந்தாலும்
உன்னை முதலில்
கையில் ஏந்துகையில்
பெண் அழகு தான்
அலுவல் கவலைகள் -பல கொண்டு
வீட்டினுள் நுழைகையில்
காத்திருந்து, கண்டதும் ஓடி வந்து
கட்டிக்கொள்ளும்
குட்டி தேவதையாய்
பெண் அழகு தான்
தனக்கு கிடைப்பதை
தன் உடன்பிறந்தவருக்காய்
விட்டுக்கொடுக்கையில்
பெண் அழகு தான்
தனக்கு பின் பிறக்கும்
குழந்தைக்கு
இவள் இன்னொரு தாயாய் இருப்பதில்
பெண் அழகு தான்
இளம் பருவத்தில்
தனக்கு பிடித்தவனை
பார்க்கையில்
நாணம் கொள்ளுகையில்
பெண் அழகு தான்
பேசி பார்த்து அறியாத ஒருவனுக்கு
பெற்றோர் சொன்னதால் நம்பி தாலி அணிந்து
அடுத்த நிமிடம் முதல் தன் வாழ்க்கையை
அர்பணிக்கையில்
பெண் அழகு தான்
சோகமாய் இருக்க தன் மடி சாய்த்து
நம் தலைகோதி கவலைபடாதே என சொல்கையில்
பெண் அழகு தான்
காலையில் நமக்கு முன் விழித்து
இரவில் நமக்கு பின் தூங்கி
இடைப்பட்ட நேரத்தில் இன்னல்கள்
பல கொண்டாலும்
மாலை வருகையில் புன்முறுவல் செய்யும்
பெண் அழகு தான்
தாயாய், தோழியாய் , சகோதரியாய்
மனைவியாய், மகளாய்,
உறவுகள் பல கொண்டாலும்
என்றும் எதிலும்
பெண் அழகு தான்
எதனினும் ஒப்பிட முடியாத
அற்புதமான அன்பில் என்றும்
பெண் அழகு தான்
****JOKER*****