Author Topic: ❤️❤️ காலமே ❤️❤️  (Read 876 times)

Offline VenMaThI

❤️❤️ காலமே ❤️❤️
« on: July 18, 2024, 08:08:22 PM »

காலமே
கொண்டு போ என்னை
நான் சிரித்து மகிழ்ந்த நாட்களுக்கு
சிரிப்பை விடுத்து அமைதியாய் இருந்து விடுகிறேன்
சிரித்தால் பின்பு அழ நேரிடும் என்பதால்....

கொண்டு போ என்னை
நண்பர்களுடன் விளையாடிய நாட்களுக்கு
விளையாடாமல் சற்று தள்ளி நிற்கிறேன்
அவர்களை பிரியும் காலம் வரும் என்பதால்...

கொண்டு போ என்னை
வாழ்வில் ஜெயித்ததாய் எண்ணி கர்வம் கொண்ட நாட்களுக்கு
தோற்பதை ஏற்று மனதை தேற்றிக்கொள்கிறேன்
தலையணை நனைக்கும் நாட்கள் பல உண்டு என்பதால்....

கொண்டு போ என்னை
என் மக்களை ஈன்றெடுத்த நாட்களுக்கு
நாட்களை நகர விடாமல் நிறுத்திவிடுகிறேன்
நித்தமும்  மகிழ்ச்சியுடன் பயணிப்போம் என்பதால்..

கொண்டு போ என்னை
என்னை அரவணைக்கும் அன்புள்ளங்கள்
அன்பாய் என்னை தாங்கிய நாட்களுக்கு
அன்பால் மட்டுமே நான் உயிர் பிழைப்பேன் என்பதால்..

கொண்டு போ என்னை
என்னை வெறுத்த சில உள்ளங்களை
உண்மை உறைத்து மீண்டும் என்னுடன் இணைத்துக்கொள்ள
யாருமே வெறுக்காத ஜீவனாய் நான் மறையக்கூடும் என்பதால்...❤️❤️❤️❤️



Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1173
  • Total likes: 3953
  • Total likes: 3953
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ❤️❤️ காலமே ❤️❤️
« Reply #1 on: July 19, 2024, 12:18:51 PM »


நன்றி வெண்மதி
கொண்டு (போ)னாய்
அழகான கவிதையால்
எங்களை
அன்புள்ளங்கள்
அன்பாய்  தாங்கிய நாட்களுக்கு

மீண்டும் கொண்டு போ
எங்களை உங்களின்
அழகான கவிதையை வாசிக்க

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "