Author Topic: நட்புடன் ஒரு கவிதை  (Read 682 times)

Offline Mr.BeaN

நட்புடன் ஒரு கவிதை
« on: July 02, 2024, 08:57:10 PM »

கட்டுத்தரியினிலே ஒரு காளை
என நானே
சுற்றித் திரிகையிலே என் கண்கள்
உனைக் காண
பட்டுத்துணியெடுத்து நெய்து செய்த
உருவம்போல்
பளிச்செனவே நீ இருக்க
சலிக்காமல் பார்த்தேனே

கிட்ட நெருங்கி வந்து உன்னிடமே
நான் பேச
எத்தணித்துத் தான் இருக்க
எனக்குள்ளும் ஒரு பயமே
சட்டென முளைத்து வர
சடுதியிலயே எனை நானே
தேற்றித்தான் எந்தன் திருவாயும்
மலர்ந்தேனே

கொஞ்சம்.உன்னோடு பேசித்தான்
பழகி விட்டு
நெஞ்சம் எல்லாமே உன்னோட
நினைப்பாக
பஞ்சம் இல்லாத பாசத்தை உனக்களித்து
வஞ்சம் இல்லாத நட்பொன்றை
கண்டேனே

இசைதான் உன் விருப்பம் என்பதையே
தெரிந்து கொண்டு
பசையாய் உன்னோடு நாளெல்லாம்
ஒட்டிடவே
இசைவாய் என் மனதை மெல்லத்தான்
நான் தேற்றி
விசையுடன் இசையதையே உனக்காக
வடித்தேனே

அப்படிதான் உன்னிடம் அன்பினை
நான் பொழிகையிலே
எப்படித்தான் நீயும் என் மனதை அறிந்தாயோ
மந்திரம்போல் உன் சொள் கேட்டு
நானும்தான்
மந்தமெல்லாம் நீங்கி உன்
சுந்தரம் ஆனேனே
intha post sutathu ila en manasai thottathu..... bean