Author Topic: நண்பனுக்கான வாழ்த்து  (Read 1119 times)

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3021
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
நண்பனுக்கான வாழ்த்து
« on: February 16, 2024, 04:02:26 PM »

தாமதமான கவிதை துளி

நட்பான நண்பன்

ஐந்து நிமிட மழைக்கு பின்னால் வரும்
வானவில் அல்ல
மேகம் பொழிந்து விட்டு சென்றாலும்
 அசையாமல் காத்திருக்கும்
வானமே நட்பு

நண்பா

உன் பேச்சில்
கண்ணாடியில் என்னை பார்ப்பதை போல்
உணர்கிறேனோ என்னவோ
 காணமலே உருவான
அழகிய நட்பு இது


நண்பா உன்

எண்ணங்கள் தான் வாழ்க்கை என்றால்
உன் வாழ்க்கை
 மலரை விட மணமாகவும்

எண்ணங்கள் தான் வெற்றியின் படி என்றால்
அடைய போகும் உன் வெற்றி
 விண்ணை தாண்டி உயரமாகவும்

எண்ணங்கள் தான் மகிழ்ச்சியின் அடிப்படை என்றால்
காண  போகும் உன் மகிழ்ச்சி
எல்லை அற்றதாகவும்

எண்ணங்கள் தான் நல்ல துணை என்றால்
 உன் வாழ்வின் துணை  என்றென்றும் தென்றலாகவும்

அமையப்பெறும் என்பதில் ஐயம் இல்லை எனக்கு

நண்பா

காதல் என்றால் உறவு புதுமை காணுமே
நட்பு என்றால் உறவு புனிதம் காணுமே

புனிதமான நண்பனுக்கு
 புகழும் புதுமையும் ஒரு சேர அமைய
இந்த நட்பின் வாழ்த்துக்கள் . 


VethaNisha.M