Author Topic: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்  (Read 960 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1220
  • Total likes: 4128
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
"போ"
என்று சொல்லாமலே
கடந்து விடுகிறது
கடந்த ஆண்டு

விட்டு சென்றது
பல நினைவுகளை
அது
சுவையான நினைவுகளோ ?
சுமையான நினைவுகளோ ?
அவரவர் வாழ்க்கையின்
பிரதிபலனாய்

கேளிக்கைகளிலும்
ஆர்பாட்டமாய்
துவங்கி விடுகிறது
புத்தாண்டு

அன்பை
விதைப்போம்
அறுவடை யார் செய்யினும்
அது அன்பாய் இருக்கட்டுமே

ஆசை
வளர்ப்போம்
அடுத்தவரை காயப்படுத்தாதவரை
ஆசை கொள்வோமே

சொற்களை காட்டிலும்,
மௌனத்திற்கு
அஞ்சுவோம்,
எய்யாத அம்பு
எத்திசையில் யாரை தாக்குமோ
என்ற அச்சம் இருக்கட்டுமே

இனி எந்த உறவையும்
அன்பின் கொள்முதல் நிலையம் போல
அன்பை கொட்டாமல்
சேர்த்து வைப்போம்
பிறரிடனும் பகிர

காதல்
என்றதும்
விழித்துக் கொள்ளும்
பலரது கண்கள்
அன்பு என்றதும்
அமைதி கொள்கிறது

சிந்தித்து சிந்தித்து
உணர்வுகளின்
பிடியிலிருந்து
நழுவ பார்க்கிறேன்
உன் நினைவுகள்
அணைத்துக்கொள்கிறது

வருடங்கள்
உருண்டோடினும்
உன் நினைவுகளில்
பிண்ணி கிடக்கும்
என் வாழ்வு

ஒன்றே ஒன்று
உன்னிடம் சொல்லத்தான்
இதையெல்லாம்
எழுதிக்கொண்டிருக்கிறேன்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்  :) :) :)


***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1442
  • Total likes: 3039
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
அன்பை
விதைப்போம்
அறுவடை யார் செய்யினும்
அது அன்பாய் இருக்கட்டுமே

Arumayana varigal nanba..

Iniya puthaandu vaazhthukkal..

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1328
  • Total likes: 2805
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
Azhagiya kavithaiyudhan thoodangiyathu 2024.

Happy New Year, Joker!