Author Topic: காதலித்து வாழ் !!  (Read 828 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1220
  • Total likes: 4128
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
காதலித்து வாழ் !!
« on: December 30, 2023, 06:46:19 PM »
காத்திருந்தேன்
ஆண்டுகள் பல
உன்னோடு சேரத்தான்

உன்னை கண்ட நொடி
மனசு அறிந்ததடி
காத்திருந்தது
உன்னோடு சேரத்தான்

பிரம்மனும்
ஆண்டுகள் பல
எடுத்திருப்பான்
உன்னை செதுக்கதான்

நானும் எடுத்துக்கொள்கிறேன்
ஆண்டுகள் பல
உன்னோடு வாழத்தான்

அன்பே,
நான் உன்னை காதலிக்கிறேன்

என் வரியை நிறைவு செய்தவுடன்
என் பேனாவும்
காதலிக்க ஆரம்பித்து விட்டது போலும்
பின் நிறுத்தவில்லை
சதா கிறுக்கி கொண்டிருக்குறது
உன் நினைவுகளில்

உண்மையில்
நம் அனைவரிடத்திலும்
ஒரு கடல் உள்ளது
எவ்வளவு நிரம்பினாலும்
நிரம்பாத
காதல் கடல்

காதலர்கள்
நேரில் பார்க்காவிட்டாலும்
அவர்களின் மனம்
எப்போதும் ஒருவரையொருவர்
பார்க்கிறது

அன்புக்குரியவர்கள்
தங்களைத் தாங்களே
தூர விலக்கிக் கொள்ளும்போது,
​​அன்புக்குரியவர்
தம்மைத் தாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது
அவர்களுக்குத் தெரியாது

உனக்கு பின்னால்
இனி காதல் இல்லை..

கல்லறையில்
வைக்கத் தயாராக இருக்கும்
மலரின் கடைசி இதழாக
அந்த நினைவுகள்
கல்லறை வரை இருக்கட்டும்

காதலித்து வாழ் !!


***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "