Author Topic: Song num 10 en kangal unnai parrka  (Read 1110 times)

Online Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
Song num 10 en kangal unnai parrka
« on: December 07, 2023, 08:46:24 AM »
வணக்கம் மக்களே ..
என் எண்ணத்த்தில் எழுந்த வரிகளை கொண்டு இந்த பாடல் பாடிருக்கேன்.கேட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றி..

பல்லவி

என் கண்கள் உன்னை பார்க்க
என் நெஞ்சம் உன்னை தேட
என் காதல் உன்னை சேருமா அன்பே..

முள்ளோடும் பூக்கள் பூக்கும்
தேய்ந்தாலும் நிலவு தோன்றும்
உன்னுள்ளும் காதல் பிறக்குமா அன்பே

கனவுகள் காண்கிறேன் நிஜத்தினில் நீ வர
கவிதைகள் போல வந்து காதல் சொல்லி கலந்திட

கருவறை தொன்றினேன் கல்லறை போகிறேன்
இடைவெளி நீங்கிட உன் இதயம் இங்கு கேட்கிறேன்

சரணம்

மேகத்திலே நீர் துளிகளை போலவே
உன் மனதில் நானும் சேர ஏங்கினேன்

காற்றென நீ கடந்து போக பார்க்கையில்
நாட்களுமே யுகங்களாக தாங்கினேன்

எந்நாளும் உன்னோடு நான் வாழ
என் நெஞ்சை பெண்ணே நீ தான் ஆள

வரம் ஒன்றை கேட்கின்றேன் தருவாயா
கரம் கோர்த்து என்னோடு வருவாயா

இந்த பாடலை கேட்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.


intha post sutathu ila en manasai thottathu..... bean