Author Topic: முதல்காதல்..  (Read 833 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1229
  • Total likes: 4155
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
முதல்காதல்..
« on: November 30, 2023, 07:53:45 PM »
சந்தோஷமோ, சோகமோ
சரியோ, தவறோ
என்னுடைய வாழ்க்கையில்
என் முடிவுகளே
முடிவாக இருக்கட்டும்
என்றாய்

மண்ணில் புதையும் வரை
வடுவோடும்.. வலியோடும்..
முடிந்து போகும் வார்த்தைகள்

வாழ்க்கையில்
அனுபவம் ஆயிரம்
கற்றுத் தந்தாலும்
முற்றுப்புள்ளி இல்லாமல்
கேள்விகள் மட்டும்
மனதிற்குள் ஏராளம்...

எதற்க்காக இந்த முடிவு ?

என் அறியாமையின் ஏமாற்றத்தால் 
உன் பிரிவை தாங்கிக்கொள்ளும் சக்தியில்லை

புரிந்து விட்டால்
உன்னை பிரிய
அனுமதித்திருக்கமாட்டேன் 
மறந்து விட நினைத்தாலும்

மறக்க முடியாமல் தவிப்பது
என்னவோ வாழ்வின்
முதல்காதல்தான்!

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1229
  • Total likes: 4155
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: முதல்காதல்..
« Reply #1 on: November 30, 2023, 07:55:58 PM »
இதுவரை
உன்னை ஆயிரம் முறை
பார்த்திருப்பேன்
ஆனால்
இன்னும் நான் உன்னை
முதன் முதல் பார்த்த
நொடி என் நெஞ்சை விட்டு
நீங்கவில்லை

அதற்குள்
நமக்குள் பிரிவு
மூச்சடைக்கிறது

எத்தனை இரவுகள்
இன்னும் நீளாதோ என
ஏங்கியிருப்பேன்
இன்று
தூக்கமில்லா
இரவு கடக்கையில்
கண்ணும் தூங்கவில்லை
காரணமும் தெரியவில்லை
தேய்பிறையில்
என் நினைவுகளின்
பிம்பம் மட்டும் மிச்சம்

விட்டுக்கொடுத்தேன்
உனக்காய் எல்லாவற்றையும்
இன்று
உன்னையே
விட்டு விட  சொல்கிறாய்
என்னால் முடியவில்லை

என்மேல்விழுகின்ற
மழை நீரில்
என் கண்ணீரை
யாரிவாரோ !?

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1328
  • Total likes: 2805
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
Re: முதல்காதல்..
« Reply #2 on: December 01, 2023, 03:34:52 AM »
என்மேல்விழுகின்ற
மழை நீரில்
என் கண்ணீரை
யாரிவாரோ !?


"மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது'
-சார்லி சாப்ளின்
« Last Edit: December 01, 2023, 03:40:25 AM by Ishaa »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1229
  • Total likes: 4155
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: முதல்காதல்..
« Reply #3 on: December 01, 2023, 11:48:08 AM »
ஆமா அவர் சொன்னது தான்

மழையில் நனைவது யாருக்கு தான் பிடிக்காது !?

அது ஆனந்தமா இல்ல அழுகையை மறைக்கவா என்பது தான் வித்தியாசம்

நன்றி !!


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "