விந்திலொரு விந்தையாய் !
பலகோடி அணுக்களை கொன்று ,
அதிலொன்று மட்டுமே வென்று !
பெண்ணிலே தங்கும் கருவாய் ..
நெடுநாள் கருவில் உறங்கி ,
சிரிதென உருவாய் சுருங்கி ,
பின்னர் மண்ணில் இறங்கி ,
பிறப்பால் வருமே உயிராய் !!
அன்பென்ற ஒரு சொல்லின்
அடி நாதமாய் இருந்து ..
அக்கறை காட்டும் சக
மனிதர்களால் வளர்ந்து ..
அடங்கி ஆர்ப்பரித்து
பல நிலைகள் கடந்து ..
அவமானம் வெகுமானம்
அத்தனையும் சுமந்து ..
நல்லவை தீயவை
என்னும் பல உணர்ந்து ..
ஐம்புலன்களின் உணர்வை
அப்படியே சுவைத்து ..
வாழ்க்கை எனும் வார்த்தையின்
அர்த்தமும் புரிந்து ..
ஏற்றம் இறக்கம் எனும்
நிலைகள் அடைந்து ..
அடுத்தவர் மனங்களை
எல்லாம் படித்து ..
பட்ட காயங்கள்
யாவும் மறந்து ..
உலக வாழ்க்கையை
முற்றும் துறந்து ..
நால்வர் காலில்
நாமும் மிதந்து ..
ஒரு நாள் போவோம்
நாமும் மரித்து..
இதுதான் மண்ணில் நமதுபாதை
இவற்றில் நாம் கொண்டு போவது எதை?
எல்லா உயிர்க்கும் இறப்போன்று உண்டு
இறந்தாலும் பிறர் மனதில்
வாழ்வதே நன்று
குற்றம் கண்டு வாழ்வதை
விடுத்தே ,
சற்றே நாமும் சிந்திப்போம்..
பற்றாய் யாவரின் உணர்வை மதித்தே ,
மற்றவரிடத்தில் மனிதம் வளர்ப்போம்..!!!
மனதை மதித்து !!
மனிதம் வளர்ப்போம்!!
அன்புடன் திருவாளர் பீன்