Author Topic: நீ இன்றி நானில்லை 2  (Read 630 times)

Offline Mr.BeaN

நீ இன்றி நானில்லை 2
« on: November 15, 2023, 06:08:49 PM »
விருந்தினர் போலே
அகமது மகிழ
வேடிக்கை நிறைந்து
சுற்றி வந்தேன்

மலரெனும் விழியால்
முகமது மனதில்
பதிந்திட நானே
சொக்கி நின்றேன்

காதலும் முளைத்து
கனவுகள் பிறக்க
புதிதாய் பிறந்ததாய்
நினைத்திருந்தேன்

கரு நிற மேகம்
காற்றினில் மெதுவாய்
கலைவது போலே
அவள் பிரிய

கண்களில் ஏனோ
காவிரி போலே
கண்ணீர் ஆறும்
ஒடியதே

மருந்தென நஞ்சை
நினைத்து விட்டேனோ
என்றுதான் இன்று
உணருகிறேன்

மனமதில் பதிந்த
அவளது நினைவை
மறப்பது கடினம்
தினருகிறேன்

காதலுடன்  திருவாளர் பீன்
« Last Edit: November 15, 2023, 07:40:29 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean