Author Topic: போ நீ போ  (Read 876 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
போ நீ போ
« on: November 15, 2023, 07:59:35 AM »
புத்தனென ஆசை இன்றி

சத்தியத்தின் பாதை சென்றேன்



எப்படித்தான் உன்னை கண்டேன்

எனக்கும் புரியவில்லையடி



மத்ததெல்லாம் மறந்து போக

நீயே இன்று என்னுள் வந்தாய்



எத்தனையோ இன்பங்களை உனை

காணும் போது நீயே தந்தாய்



உள்ளதை நான் சொன்ன போதே

ஏனோ நீ கோவம் கொண்டாய்



கத்தியின்றி எந்தன் நெஞ்சை

நீயேதான் காயம் செய்தாய்



கண் சிமிட்டும் நேரம் கூட

உனை பிரியா வரமும் வேண்டும்



 என்றுதான் கடவுள் எல்லாம்

வரம் தர வேண்டி நின்றேன்



விட்டு தான் போவேன் என நீ

எனக்கும் சாபம் தந்தாய்



நித்தம் ஒரு யுத்தம் மனதும்

புத்தியுடன் போடக் கண்டேன்



எத்துனை தான் நீயும் என்னை

காயங்கள் செய்தால் கூட



சொந்தமென நீயும் நெஞ்சில்

வந்தது தான் மாறாதடியே


காதலுடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean