Author Topic: போகாதே..  (Read 803 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
போகாதே..
« on: November 14, 2023, 07:09:58 PM »
முன்பொரு நேரத்தில் உன்னுடன் நான்
நன்றென அன்புடன் பேசி வந்தேன்

உன்னுடன் பேசிய வார்த்தையுமே

அன்று மின்னலாய் என் மனம் கொய்ததடி

இன்றுதான் கோவத்தில் நீ இருக்க

பிழை என்ன செய்தேனோ நான் அறியவில்லை

கோவத்தில் நீ விடும் வார்த்தைகளோ

கூர் அம்பினை போல் என்னை கொல்லுதடி

உன் பிம்பம் நானுமே கண்ட நொடி

மயில் தோகை போல் என் நெஞ்சை கூசுமடி

மௌனமாய் நீயுமே போகையிலே

பிண வாடை தான் என் மீது வீசுமடி

ஒன்றினை மட்டுமே உன்னிடத்தில்

நான் சொல்லிடத்தானே எண்ணுகிறேன்

கன்னி நீயும் என்னை நீங்கி சென்றால்

நான் கல்லிலே வடித்த சிலை ஆவேன்...


காதலுடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean